தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20224l5-4.5 தொகுப்புரை

  • 4.5 தொகுப்புரை
    நண்பர்களே! இதுவரை வைணவ சமயநெறி வழிபாடு முதலியன பற்றிய செய்திகளை அறிந்து இருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.
    1)
    கர்மயோகம் என்றால் என்ன, ஞானயோகம் என்றால் என்ன, பக்தியோகம் என்றால் என்ன என்பன பற்றியும் அவற்றிற்குக் கூறப்படும் விளக்கம் பற்றியும் அறிந்திருப்பீர்கள்.
    2)
    இம்மூன்றனைக்காட்டிலும் ஆழ்வார்கள் பெரிதும் வலியுறுத்திப்பேசியது பிரபத்தி என்னும் சரணாகதி நெறியே என்று அறிந்திருப்பீர்கள்.
    3)
    பிரபத்திக்குக் கூறப்படும் விளக்கம், அதனை உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டிய முறைபற்றியும் அறிந்திருப்பீர்கள்.
    4)
    இந்நெறிகளுக்கு மேலாக, வைணவம் -ஆசார்யாபிமானம் (ஆசிரியப்பற்று), சித்தோபாயம் என்னும் நெறிகளைப் பரிந்துரைப்பது பற்றியும் படித்திருப்பீர்கள்.
    5)
    இப்பாடத்தின் முடிவில் வைணவ சமயம் - வைகானசம், பாஞ்சராத்திரம் என்னும் இருவகையான வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவதுபற்றியும் விரிவாக உணர்ந்திருப்பீர்கள்.

    1.
    சித்தோபாயம் என்றால் என்ன?
    2.
    வைணவத்தின் ஆகம வகைகள் யாவை?
    3.
    வைகானசர் திவ்வியப் பிரபந்தங்களை ஏன்
    ஓதுவதில்லை?
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:32:45(இந்திய நேரம்)