உடம்பொடுபுணர்ந்தது என்றது மிகும் என்ற
சொல்லில் ரத்தை மிகூம் என நீட்டிக் கூறி
உகரம் ஊகாரமாகும் என்னும் விதியை
அதனுளமைத்தமையை
உண்கா - உண்கு+ஆ=உண் பேனா ?
உமண் - உப்பமைக்குஞ்சாதி ; உமணர்
உய்த்துணர்ச்சி - ஆராய்ந் துணர்தல்
உயிரில் எழுத்து என்றது மெய்யும், ஆய்தமும்,
குற்றுகர மாகிய இவற்றை
உயிர்க்கிழவன்-உயிராகிய கிழவன்,
கிழவன் - உரியோன்
உரிஞ் - உரிஞ்சல் (உரோஞ்சல்)
உருபின் பொருள்படவந்தவேற்றுமை -
வேற்றுமைப் பொருட்புணர்ச்சி
உரைச்செய்யுள் - வாக்கிய நடையாலாகிய செய்யுள்