கண்கூடு - பிரத்தியட்சம் (காட்சி)
கண்ணழித்தல் - பதம்பிரித்துப் பொருள்கூறல்
கப்பி - அக்காலத் தேயவழக்குப்பெயர்
கபிலபரணர் - கபிலனும் பரணனும், இது னகரவீறு.
ஈழ வக்கத்தி முதலியன னகர வீற்றுக்கும் ரகர
வீற்றுக்கும் பொது. ஈழவன்கத்தி ஈழவர் கத்தி
என்று விரிக்கலாம் என்றபடி
கருவித்திரிபுகள் - கருவித்திரிபுப் புணர்ச்சிகள்
கழற்பெய்குடம் - கழற்காய் இட்டகுடம்