முடிந்ததுகாட்டல் - தொல்லாசிரியர் கூறினார்
என்று சொல்லுதல்
முதலா - மொழிமுதலில் வாராதன
முதலின் - அடியாகக் கொள்ளுகையினாலே
முயற்கோடுஇன்று - இன்மைப்பொருளாதலின்
புணர்க்கப்படும் என்பது கருத்து
முற்கு - கர்ச்சனை ; (முக்குதல் என்பாரு முளர்)
முறையன்றிக்கூற்று - முன் சொன்ன முறைப்படி
கூறாது மாறிக் கூறல்
முன்னின்றான் தொழிலுணர்த்துவது -
முன்னிலைவினை