Primary tabs
யொலிக்குங்கால் மூன்று மாத்திரையின்
மிக்கொலிக்குமென்பதூஉம் படும்
ஆதலானும், அது பொருந்தாதென்பதே துணிபாம்.
இன்னும், நீட்டம்
வேண்டி ஓரெழுத்தை நீட்டுங்கால் அதனையே வேண்டியஅளபு நீட்டலாமாதலின், மற்றோரெழுத்துக்கூட்டி நீட்டவேண்டுமென்னும்
யாப்புறவின்மையானும், இன்னிசையளபெடையிற் குற்றெழுத்தொன்றே நெடிலாக நீண்டு பின்னளபெடுத்தல் கண்கூடாதலானும் ஈரெழுத்துக்கூடி
நீளுமென்றல் பொருந்தாமை துணிபாம். மேலும், எழுத்துக்களே
சேர்ந்தொலிக்குமென்பது கருத்தாயின் நெடிலுங் குறிலுங் கூடி எழுமென
விளங்கக்கூறுவார்மன்; அங்ஙனங்
கூறாமையானும் ஆசிரியர்க்கது
கருத்தன்மை துணியப்படும். ஆதலின் "நீட்டம்வேண்டின்" என்னுஞ்
சூத்திரத்துக்கு அவ் விருவருரையும் பொருத்தமுடைய
வல்லவென்பதே
துணிபாம். அற்றேல் அச்சூத்திரத்துக்குப் பொருள் யாதோவெனின்,
கூறுதும். அவ்வுரை வருமாறு :-
நீட்டம்வேண்டின் -
(ஓரெழுத்து முன்னையினும்)
மாத்திரை
மிக்கொலித்தலை விரும்பின்,
அவ்வளபுடையகூட்டி - விரும்பிய
மாத்திரையையுடைய எழுத்துக்களை (அளவின் பொருட்டு)
அவ்வெழுத்தோடுகூட்டி, எழூஉதல் -
(அவ்வளபாக)
அவ்வெழுத்தினிசையை எழுப்புக, என்மனார்புலவர் - என்று சொல்லுவர்
புலவர் என்பதே.
நீட்டம் - நீளல். அஃது "உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்" என ஆசிரியர் பின்னுங் கூறுமாற்றான் அறியப்படும். இங்கே நீட்டம்வேண்டின் என்று கூறியதனையும், எழூஉதலென்பதனையும் உற்றுநோக்குமிடத்து ஒன்றே தன்னிசை நீண்டு ஒலித்தலன்றி இரண்டுகூடி நீண்டிசைத்தலென்பது பொருந்தாமை பெறப்படும். பிறாண்டும், "அளபிறந்துயிர்த்தலும்" எனவும், "ஒற்றிசைநீடலும்" எனவும், "நீடவருதல் செய்யுளு ளுரித்தே" எனவும், "உரைப் பொருட் கிளவி நீட்டமும் வரையார்" எனவும், "யகார வுகாரம் நீடிட னுரித்தே" எனவும், "ஆறன் கிளவி முதனீ ளும்மே" எனவும், "முதனிலை நீடினு மான மில்லை" எனவும் ஆசிரியர் கூறிய சூத்திரங்களை நோக்கும்போது ஓரெழுத்தே நீளுமென்பதன்றி, இரண்டெழுத்துக்கூடி நீளுமென்பது ஆசிரியர்