Primary tabs
இன்னும், ஆசிரியர் தொல்காப்பியர்
"இகர யகர மிறுதி விரவும்" என
இறுதிப்போலி கூறியதனானே, இது முதற்கண்வரும் போலியெழுத் தென்பது
கொள்ளவைத்தமையானும், இது
சந்தியக்கரமுணர்த்திய தன்மை
தெளியலாம். "இகர யகர மிறுதி விரவு" மென்ற சூத்திரம் இறுதிப்போலி
என்றல் பொருந்தாது. அது : 'அகரத் திம்பர் யகரப்
புள்ளியு' மென்புழி
இம்பர் என்பது பின் எனப் பொருள்படுமேனும்,
காலம்பற்றிவந்தபின்னோ
இடம்பற்றிவந்தபின்னோ என்பது
தெளியப்படாமையின் அதனை
விளக்கியவந்ததென்றா லென்னையெனின், -
"நெட்டெழுத் திம்பர்"
ஆசிரியர் கூறியவிடங்களி
லெல்லாம் அவ்வாறு விளக்கல் வேண்டு
மென்பதுபட்டு ஆசிரியர்மேற் குற்றம்பற்றுமாதலானும்,
ஆசிரியர் இம்பர்
என்று கூறிய இடங்களிலெல்லாம் அச்சொல்
காலம்பற்றிய பின்னாகவே
பொருள்படுதலானும் அது பொருந்தாதென்பது.
இனி, 'அகரத்திம்பர் ... ... ... ... தோன்றும்' என்னுஞ் சூத்திரத்து
வரும்
'மெய்பெறத் தோன்று' மென்பதனால்
அகர யகரம்போல, அகர இகரம்
ஐயின்வடிவு நன்கு புலப்படவாராதென்பது பெறப்படுதலினாலும், செய்யுட்கட்
பயின்று வாராமையானும், நச்சினார்க்கினியர்
'அகரவிகர மைகாரமாகும்'
'அகரவுகர மௌகாரமாகும்' என்னும் இரண்டு
சூத்திரவுரையின்கண்ணும்
அது கொள்ளற்க என விலக்கி,
செய்யுட்கட்பயின்று வருதலானே,
'அகரத்திம்பர் ... ... ... தோன்றும்', என்பதனுரையின்கண்
'அது கொள்ளற்க'
என விலக்காது பின் இறுதிப்போலிகூறும்
'இகர யகர மிறுதி விரவும்'
என்னுஞ் சூத்திரவுரையின்கண் செய்யுள்