"குறியத னிறுதிச் சினைகெட வுகர
மறிய வருதல் செய்யுளு ளுரித்தே"
"நூறென் கிளவி யொன்றுமுத லொன்பாற்
கீறுசினை யொழிய வினவொற்று மிகுமே"
கூறிய சூத்திரங்களில் வரும் 'சினை'
என்னுஞ் சொற்களின் பொருளை
ஆராயவே நன்கு விளங்கும். சுட்டுச்சினை
என்பதற்குச் சுட்டாகிய
சினையெழுத்தென்று நச்சினார்க்கினியர்
பொருளுரைத்தமையானு
மஃதுணரலாம். அங்கே சினைஎழுத்தென்றுரைத்தவர், இங்கே எழுத்தெனப்
பொருளுரைத்த தென்னையெனின், சந்தியக்கர
முணர்த்திய திதுவெனப்
பிறர் கூறுவார் என்ப
துணர்த்தியதெனப் பிறருரைப்பாரென்ப
துணர்ந்திராமையின் அவ்வாறு சுருக்கிக்
கூறினார். உணர்ந்திருப்பாயின்
சினையெழுத்தென்றே விரித்துரைத்திருப்பார்.
உரையாசிரியரு மவ்வாறே
கூறியிருப்பார். சினை எழுத்தென்பதே
அவர்கள் கருத்தாதல்
அவர்கள்காட்டிய உதாரணங்களாலுணரலாம்.
ஆகையால் 'ஐயெ
னெடுஞ்சினை' என்பதற்கு, ஐயென்னும்
நெடிய உறுப்பெழுத்தென்பதே
பொருளாகி, ஐயன் கையன் என்பனபோன்ற
சொற்களின் முதற்கண்
அவற்றிற் குறுப்பாகநிற்கும்
ஐ யென்னும் நெட்டெழுத்தென்பது
போதருமன்றித் தனி ஐ என்பது போதராது. போதராமையின் அகரமும்
யகரமுஞ் சேர்த்து சந்தியக்கரமாமா
றுணர்த்தினாரல்லர் என்பது நன்கு
உணரக்கிடத்தல் காண்க.
அற்றேல், ஐ என்பது பலவெழுத்துக் கூடியதாதலின், சினை என்பதற்கு
ஐயின் சினை
என்றாலென்னையெனின், அவ்வாறுரைத்தற்கு
'ஐயெனெடிலின்சினை' என்றிருத்தல்வேண்டும்.
அவ்வாறின்மையின்
அதன்சினையென உரைக்கலாகாதென்பது.
அற்றேல், மொழிக்குறுப்பாதல்பற்றிச்
சினையென எழுத்தைக்
கூறினாரென்றா லென்னையெனின்,
"ஐஒள வென்னுமாயீ
ரெழுத்திற்" கெனவும், "நெட்டெழுத் திம்ப ரொத்த குற் றெழுத்தே" எனவும்,
"வல்லெழுத் தென்ப கசட தபற"
எனவும், இவ்வாறே யாண்டும்
எழுத்தென்றே ஆசிரிய ராளுவராதலின் அதுவும் பொருந்தாதென்பது.