இவ்வாறு எதுகைக்கட் போலியாகக்கொள்ள
நிற்றல்பற்றியே, "ஆயிரு
தொடைக்குங் கிளையெழுத் துரிய"
என்னுஞ் சூத்திரவுரையின்கண்
நச்சினார்க்கினியரும் "ஐகார
ஒளகாரங்கள் போலிவகையாற்
கிளையெழுத்தெனப்படு" மென்றார்.
இனி, ஆசிரியர் தொல்காப்பியரும்
"அகர விகர மைகாரமாகு" மென்றும்,
"அகர வுகர மௌகார மாகும்" என்றும்,
இகர உகரங்களை முன்னர்க்
கூறிப், பின்னர் "அகரத் திம்பர் யகரப் புள்ளியு - மையெ னெடுஞ்சினை
மெய்பெறத் தோன்றும்" என யகரத்தை
வேறுவைத்துக் கூறியதும்
போலியெழுத்தாமாற்றைநன்கு
புலப்படுத்தற்கேயாம். அன்றி,
நன்னூலுரையாளர் சிலர் கூறியவாறு அகரவிகரங்களுக்கிடை யகரங் கலந்து
ஐகாரமாகும் என்பதே தொல்காப்பியர்
கருத்தாயின் 'அகர விகரநடுவண்
யகரம் கலந்து ஐகாரம் தோன்றும்'
என்பதமையச் சூத்திரித்திருப்பார் ;
அங்ஙனஞ் சூத்திரியாமையின் அவர்க்கது
கருத்தன்றாதல் தெள்ளிதிற்
பெறப்படும். அன்றியும், யகரப்புள்ளியும் என இறந்ததுதழீஇய
எச்சவும்மை
கொடுத்துக் கூறினமையானு மது தெளிவாம்.
இன்னும், 'ஐயெ னெடுஞ்சினை'
என்றதனானும் சந்தியக்கரமென்பார்
கருத்து முழுதும் தூரம்போய்த் துச்சமாமாறுணரலாம்.
எங்ஙனமெனின்,
அஃது அதன் பொருளை ஆராயவே பெறப்படும்.
'ஐய னெடுஞ்சினை' என்பதற்கு உரையாசிரியரும் நச்சினார்க்கினியரும்
கூறிய பொருள் ஐ யென்னு நெட்டெழுத்தென்பது.
சினை என்பது
எழுத்துக்குப் பரியாயப்
பெயராகாது. ஆதலால், சினையென்பது
உறுப்பென்னும் பொருளையுணர்த்தி, ஆகுபெயராய் எழுத்தை
யுணர்த்தும்.
எனவே சினை என்பதற்கு உறுப்பெழுத்தென்பது பொருளாம். அது :-
"குற்றிய லிகர நிற்றல் வேண்டும்
யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக்
காவயின் வரூஉ மகர மூர்ந்தே"
"சுட்டுச்சினை நீடிய வையெ னிறுதியும்"