தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiam - Ezhuthathikaram


யால்,  ஆரியமொழியிற்  கூறிய  சந்தியக்கரத்தைத்  தமிழ்மொழிக்கண்ணும் புகுத்தவேண்டி  நன்னூலார்  போலியுணர்த்திய  சூத்திரத்தைச்  சந்தியக்கர முணர்த்தியதெனக் கொண்டு வலிந்து பொருள்கோடல் உண்மைப்பொருளும் பொருத்தமுன்றாம்.  
பின் இதன் உண்மைப்பொருள் யாதெனிற் கூறுதும் :-
அகரத்தின்  முன்  இகரமும்  யகரமுமென்று சொல்லப்பட்ட இவைகள் தனித்தனிவந்தால்  (அஃதாவது அ இ ; எனவும், அ ய் ; எனவும் வந்தால்) ஐ  போன்று  ஒலிக்கும்  என்பதும்,  அகரத்தின்  முன் உகரமும் வகரமும் வந்தால்  (அஃதாவது  அ  உ ; எனவும்,  அ  வ்  ;  எனவும்  வந்தால்) ஒளகாரம்போன்று    ஒலிக்கும்     என்பதுமே     ஆசிரியர்     கூறிய சூத்திரமுறைக்கேற்ற    உண்மைப்பொருளாம்   எனவே   போலிஎழுத்தே கூறினாராயிற்று ; இதுவே நன்னூற் பழையவுரையாசிரியர் மயிலைநாதர்க்குங் கருத்தாதல் அவருரைநோக்கி யுணர்க.  
அன்றியும்,  சந்தியக்கரமே  கூறினாராயின்  எகர ஒகரங்களையு முடன் கூறியிருப்பார். அங்ஙனங் கூறாமையானும் போலி யுணர்த்தினா  ரென்பதே துணிபாம்.  
அங்ஙனேல்,  இங்ஙனங்  கூறிய   போலியெழுத்தால்   வரும்  பயன் யாதோவெனின்,   செய்யுளில்  வரும்  எதுகைக்கண்  இவ்வாறு  கொள்ள நிற்றலே.  
அதனை,     "ஐயெ     னெடுஞ்சினை    மெய்பெறத்    தோன்றும்" என்பதன்கண்ணும்,  "கையகத் ததுவது பொய்யா காதே" என்பதன்கண்ணும், "கையது  வேலே  காலன   புனைகழன்  -  மெய்யது  வியரே  மிடற்றது பசும்புண்"    என்பதன்கண்ணும்,    "ஒளவிய   நெஞ்சத்தா   னாக்கமுஞ் செவ்வியான் - கேடு  நினைக்கப்படும்"  என்பதன்கண்ணும் வரு மெதுகைத் தொடைகளில்,  'மெய்பெற' என்பதற்கியைய, 'ஐயென்' என்பதை 'அய்யென்' எனவும்,  'பொய்'  என்பதற்கியையக் 'கை' என்பதைக் 'கய்' எனவும், 'மெய்' என்பதற்கியையக்  'கை'   யென்பதைக்   'கய்'   எனவும்,   'செவ்வியான்' என்பதற்கியைய,  'ஒளவியம்' என்பதை 'அவ்வியம்' எனவும் கொள்ளநிற்றல் காண்க.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 20:00:38(இந்திய நேரம்)