தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiam - Ezhuthathikaram


போலி எழுத்து
 
பன்னருஞ்   சிறப்பிற்  பவணந்தியார்  செய்த   நன்னூற்குரையுரைத்த உரையாளருட் சிலர்,
"அம்மு னிகரம் யகர மென்றிவை
எய்தி னையொத் திசைக்கு மவ்வோ
டுவ்வும் வவ்வு மௌவோ ரன்ன"
 
என்னுஞ்  சூத்திரத்தாற்  பவணந்தியார்  போலி  எழுத்துணர்த்தினாரல்லர் எனவும்,  சந்தியக்கரமே  யுணர்த்தினாரெனவும்  உரைத்தனர்.   அவருரை பொருந்துமா ? என்பதே ஈண்டு யாம் ஆராய்வது.  
அவருரைத்தவாறு  பவணந்தியார்   சந்தியக்கரமே  யுணர்த்தினராயின், 'அம்முன்  யகர  மிகர'  மென்றும், 'அவ்வொடு வவ்வும் உவ்வும்' என்றும், 'ஒத்துஎய்தின்'  என்றும்,  'ஐயிசைக்கும்'  என்றுந்  தாங்குறித்த   பொருள் இனிது   விளங்கச்  சூத்திரத்திருப்பார்மன் ; அவ்வாறு  சூத்திரியாமையின் அவர்க்கது கருத்தன்றென்பது பெறப்படும்.  
அங்ஙனமன்று ;   'இவை'  என்னுந்  தொகைச்சொல்லானே  இரண்டுங் கூடிவருமென்பது  பெறப்படுதலின்,  ஏற்றவாறு மாற்றிப் பொருள்கோடலாமாகலானும் 'ஒத்து'  என்பதை 'எய்தின்'  என்பதனோடு கூட்டிப் பொருளுரைக்கலாமாகலானும்,  சந்தியக்கரமென்பதே யாசிரியர் கருத்தெனின்,   என்முன் சாத்தன்  கொற்றனிருவரும் வந்தாரென்றால், இருவரும் வந்தாரென்பதல்லது கூடியேவந்தாரென்பது பெறப்படாமைபோல்,  இவை என்னுந் தொகைச்சொல்லானும் இரண்டும் வருமென்பது பெறப்படுமன்றிக் கூடியேவருமென்பத  பெறப்படாமையின் மாற்றிப் பொருள்கோடலாமென்பது பொருந்தாமையானும்,  எய்தின் என்பதனோடு ஒத்து என்பதைக் கூட்டிப்பொருள்கோடல் வலிந்து கோடலாமாகலானும், அஃதவர் கருத்தாகாது. ஆகுமெனின், ஆசிரியர் சூத்திரம் யாத்தற்கறியாரென்பது படும் ; ஆதலின் ஆகாதென்பதே துணிபாம். ஆகை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 19:58:51(இந்திய நேரம்)