தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiam - Ezhuthathikaram


சூத்திரவுரையில்,  "அளபிறந்தன  வென்றது நெட்டெழுத்து அளபெடையாயும், அளபெடை மூன்று   மாத்திரையினிறந்தும் சேய்மைக்குத் தக்கவாறு நீண்டிசைக்கு மென்றவாறு" என்பதனா லறிந்துகொள்க.  

இதுகாறுங் கூறியவாற்றானே அளபெடுக்குங்கால் நெடிலுங் குறிலுங் கூடிநின்று அளபெடுக்குமென்றல் பொருந்தாதென்பதூஉம் நெட்டெழுத்தேழே அளபெடுக்கு மென்பதூஉம், குற்றெழுத்துக்கள் குறியாய்வரும் என்பதூஉம் துணிபாதல் காண்க.
 

["செந்தமிழ்" தொகுதி - 26, பகுதி - 7]

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 19:56:30(இந்திய நேரம்)