Primary tabs
அங்ஙனேல், "மூவள பிசைத்த
லோரெழுத் தின்றே" என்றதனோடு
மாறுபடுமேயெனில், மாறுபடாது. என்னை ?
அச்சூத்திரத்திற்கு நெடிலுங்
குறிலும்போல இயல்பாயவோரெழுத்து
மூவளபிசைத்தலின்று என்பது
பொருளாமன்றி, ஈரெழுத்துக்கூடி யொலித்தல் பொருளன்றாமாதலின்.
எனவே, விகாரமாய ஓரெழுத்து மூவளபிசைத்தலுண்டென்பது.
விகாரம்
என்றது ஈண்டு நீடலை. இந்நீடலை அனுவதித்தே
பின் "நீட்டம்வேண்டி"
னென ஆசிரியர் கூறினார். இதனானும்
ஓரெழுத்தே நீடும் என்பது
தெற்றெனப்படும். எழுத்துப்பேறளபெடைகளைப்
புலுதசங்கு என்று
வடநூலார் கூறுவர்.
இனி, பாணினியார்
கூறிய "... ... ... ... ... ... ... ... ..." என்னுஞ் சூத்திரவுரையில்,
குறிலும் நெடிலும் அளபெடையும்
முறையே ஒருமாத்திரையும் இரண்டுமாத்திரையும்
மூன்று மாத்திரையும் உடையன வென்றும்,
இவற்றிற்கு மாத்திரை வரையறுக்குங்கால் உ, ஊ, ஊஉ என்னு மெழுத்துக்களின்
மாத்திரையே அளவாகக்கொள்ளப்படுமென்றும், இவற்றை யளவுகருவியாகக்கொண்டது,
(முறையே) ஒன்று இரண்டு மூன்று என்னும் மாத்திரைகளையுடைய
கு, கூ, கூஉ என்னும்
கோழியினுடைய அனுகரணவோசைபோலிருத்தல்
பற்றி யென்றும் கூறுமாற்றானும் ஓரெழுத்தே நீண்டொலிக்குமென்பது வடநூலார்க்குங் கருத்தாதல் காண்க.
இனிச் சேனாவரையர்க்கும்
நெட்டெழுத்தொன்றே நீளுமென்பத
கருத்தாதல்,
சொல்லதிகாரத்து 152-ம்