Primary tabs
இனி, "அவ்வளபுடையகூட்டி"
யென்பதற்கு அவ்வளபுடைய ஓசைகளை
அதிகப்படுத்தி எனப் பொருள் கூறலும்
பொருந்தும். ஓசைகள் என்றது
எழுத்தொலிகளை. நான்கு மாத்திரையுங்
கோடற்குப் பன்மையாகக்
கூறினார்.
இங்ஙனம் இச்சூத்திரத்திற்குப் பொருள்கூறாது நெடிலுங் குறிலுமாகிய இரண்டெழுத்துங் கூடியொலிக்குமெனப்பொருள் கூறின் ஆசிரியர் கருத்தொடு முரணுவதன்றி ஆசிரியரையும் பிழைபடுத்துவதாக முடியும். இரண்டெழுத்துக் கூடியயொலிக்குமென்றல் தமது கருத்துக்கு முரணுவதாற்றான் சிவஞானமுனிவரும் "எழுத்துப்பலவாயின ஒலிவேற்றுமையானன்றே. அங்ஙனமாதலின், நெடிலதுவிகாரமாய் ஓரொலியாய்ப் பிறப்பதே யளபெடையென்பார் நெடி லளபெழுமென்றும், 'அவற்றவற் றினக்குறில் குறியே' என்றுங் கூறினார்" என நன்னூலார் கருத்தை முற்கூறிப் பின், "ஆசிரியர் தொல்காப்பியனாரும் நீருநீருஞ் சேர்ந்தாற்போல நெட்டெழுத்தோடு குற்றெழுத்து ஒத்து நின்று நீண்டிசைத்தலே யளபெடையென்பார், 'குன்றிசை ............. குற்றெழுத்தே' யென்றும், நெடிலுங் குறிலும் என்றும், நெடிலுங் குறிலும் விரலும் விரலும் சேரநின்றாற்போல இணைந்துநின்று அளபெடுக்குமென்றல் பொருந்தாமைக்கு எழுத்தெடையென்னாது அளபெடை யென்னுங் குறியீடே சான்றாதலறிக" என்றும் கூறினார். இக்கருத்தை நாம் உற்றுநோக்கும்பொழுது முனிவர் உரையாசிரியர்களுடைய உரைக்கியைய அவ்வாறு கூறினா