Primary tabs
அற்றேல், நெட்டெழுத்துக்கள்
நீளுங்கால் நீண்ட அவற்றையும்
ஓரெழுத்தாகக் கொள்ளலாமேயெனின், அவை
மொழிக்குக் காரணமாய்
வேறு எழுத்தோடு சேர்ந்தாயினும் தனித்தாயினும்
பொருடாராமையின்
அவை எழுத்தாகக் கொள்ளப்படா
என்க. இக்கருத்தமையவே
சிவஞானமுனிவரும், "இந்நெட்டெழுத்துக்கள்
மொழிக்காரணமாய்
வேறுபொருடந்து நிற்றலின்,
அதுபற்றி வேறெடுத்தெண்ணி
உயிர்பன்னீரெழுத் தெனப்பட்டன. அளபெடை
அந்நெட்டெழுத்தோடு
குற்றெழுத் தொத்துநின்று நீண்டிசைப்பதொன்றாயினும், மொழிக்காரணமாய்
வேறு பொருடாராது இசை நிறைத்தன்மாத்திரைப்பயத்ததாய்
நி்ற்றலின்
வேறேழுத்தென
வைத்தெண்ணப்படாதாயிற்றென்பது,
நுண்ணுணர்வானோர்ந்துணர்க. "குன்றிசை
மொழிவயின் நின்றிசை
நிறைக்கும் - நெட்டெழுத் திம்ப ரொத்தகுற்
றெழுத்தே" என்றதூஉம்
இக்கருத்துப்பற்றி யென்க" எனச் சூத்திர விருத்தியிற் கூறுதல் காண்க.
இன்னும், நெடிலையுங்
குறிலையுஞ் சேர்த்துச் சொல்லுங்கால்
இரண்டுஞ்சேர்ந்து
பிளவுபட்டொலிக்குமேயன்றிப்
பிளவுபடா
தொலிக்கமாட்டா. இதுபற்றியே சங்கரநமச்சிவாயரும்
"இசைகெடின்" என்னும்
நன்னூற் சூத்திரவுரையில் "எழுத்துப் பலவாயின
ஒலிவேற்றுமையானன்றே
அங்ஙனமாக நெடிலது விகாரமாய் ஓரொலியாகப்பிறக்கும் அளபெடையை
இரண்டெழுத்துக்கூடி மூன்று மாத்திரையாயிற்றெனக்
கொள்ளின்
இரண்டெழுத்தொலி யங்ஙனமின்மையானும்,
அளபெடையென்னும் பெயர்
ஏலாமையானும் அவ்வாறு
கொள்ளாது அறிகுறியே என்று
கோடற்குக்குறியே என்றார்" என்றுங் கூறினார்.
இனி, நெட்டெழுத்தே யளபெடுக்குமென்பது நச்சினார்க்கினியர்க்குங் கருத்தாதல், "நீட்டம் வேண்டின்" என்பதற்கு, "இரண்டுமாத்திரை பெற்ற வெழுத்து அம்மாத்திரையின் மிக்கு ஒலித்தலை விரும்புவாராயின்" என்றும், "அந் நெட்டெழுத்துக்களே யளபெடுத்தலிற் சொல்லாதலெய்