தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiam - Ezhuthathikaram

நச்சினார்க்கினியர் சந்தனக்கோல் குறுகினாற் பிரப்பங்கோலாகாது ; அதுபோல உயிரதுகுறுக்கமும் உயிரேயாம் என்று கூறிய மறுதலையுவமையை நோக்கும்போது ஓரொலி வேறோரொலியாகக் குறுகலும் நீடலும் அடையாதென்பது பெறப்படும். அற்றேல், இரண்டுமாத்திரைநீட்சிக்கு இரண்டுமாத்திரைபெறும் எழுத்தைக் குறியாக இடாது இரண்டுகுற்றெழுத்தையிடுவது என்னையோவெனின் ? ஒருமாத்திரையுடைய எழுத்து நீளுங்காற் பின்னும் ஒருமாத்திரை மிக்கு இரண்டு மாத்திரையாய் நீண்டு நெடிலாயவாறுபோல நெடிலும் நீளுங்கால் ஒவ்வோர்மாத்திரைமிக்கே நீளுமாதலின் இரண்டுகுறில் குறியாக இட்டு ஆளப்படு மென்க. இக்கருத்து, "அளபெடை மிகூஉ மிகர விறுபெய - ரியற்கைய வாகுஞ்செயற்கைய வென்ப" என்னுஞ் (சொல் - 125-ம்) சூத்திரத்துக்குச் சேனாவரையருரைத்த உரையானும் நன்குபுலப்படும். இன்னும் நச்சினார்க்கினியரும் ஒன்றுநின்று அதனொடு பின்னரும் ஒன்றுகூடியே இரண்டாவதன்றி இரண்டென்பது ஒன்று இன்றாகலின் என்றதனானும் அஃது உணரத்தக்கது. ஆகாரம் என்னும் நெட்டெழுத்து நீளுங்கால் ஒருமாத்திரை நீண்டு அகரமாய் நின்று ஒலிக்குமென்பதுபற்றியே,

"குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே"
 

என்று ஆசிரியர் கூறுவாராயினர். இச்சூத்திரத்தில் ஆசிரியர் குற்றெழுத்து இசைநிறைக்குமென்றதினால் அக்குற்றெழுத்து எழுத்தாகக் கொள்ளப்படாதென்பதூஉம், ஒலிவடிவில் அவ்வளபெடையோசை அவ்வவ் வினவெழுத்தாய் நீண்டொலிக்கு மென்பதூஉம் கூறினாராயிற்று. ஆகவே, குற்றெழுத்து ஒலிவடிவில் நெட்டெழுத்தின்பின் நின்று இசைநிறைக்கு மென்பதூஉம், வரிவடிவில் அது நெட்டெழுத்து அவ்வவ்வினமாய் நிண்டொலிக்குமென்பதற்கும், மாத்திரைக்குக் குறியாய்நிற்குமென்பதூஉம் தானேபோ தருதலின் இசைநிறைக்கும் என்றதூஉம், குறிஎன்றதூஉம் தம்முள்முரணாமை உணர்ந்துகொள்க.

இக்கருத்தமையவே  சிவஞானமுனிவரும்  தாம்   திருத்திய   நன்னூல் விருத்தியுரையுள்  "இசைகெடின்"  என்னுஞ்  சூத்திரத்து  வரும்   'குறியே' என்பதற்கு வரிவடிவில் அறிகுறியாம்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 19:47:34(இந்திய நேரம்)