தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


xi

வரையரும்   நச்சினார்க்கினியரும்  ஒரு  பொருளைக்  குறிக்கும் ஒரு
சொல்.  இசை,  பண்பு குறிப்பு என்பவற்றுள் ஒன்றன்  அடிப்படையில்
அமைதலின்  பொருள் என்பது இசை, குறிப்பு, பண்பு  என்பனவற்றுள்
ஒன்றைக்  குறிக்கும்  எனக் கொண்டனர். மிகுதி  என்னும் பொருளை
‘உறு’  என்பது  குறிக்கும்  உரிமையுடைமையின் அவ்வுறு உரிச்சொல்
என்பது   இளம்பூரணர்   கருத்து.   உறு  கால்  என்புழிக்  காற்றின்
மிகுதியை  ‘உறு’  என்பது  குறிப்பால்  உணர்த்துதலின் அது மிகுதிக்
குறிப்புக்கு    உரிமை    பூண்டு   உரிச்சொல்   ஆயிற்று  என்பது
சேனாவரையர் போல்வார் கருத்து.

மிகுதி என்பது ஒரு சொல். அச்சொல் உணர்த்தும் பொருளை நாம்
எளிதில் உணர்வோம். அம்மிகுதி என்னும் வாய்பாட்டால் (சொல்லால்)
உணர்த்தப்படும்   பொருளுக்கு   ‘உறு’  என்பதும்  உரிமை  பூண்டு
நிற்றலின்  அது  உரிச்சொல்  ஆயிற்று  என்பது தெய்வச் சிலையார்
கருத்து.

இளம்பூரணர்   சேனாவரையர்  தெய்வச்  சிலையார்  ஆகியோர்
பொருள்   என்பதை  எவ்வாறு  கருதினாலும்  முடிவில்  சொல்லால்
உணர்த்தப்படும்  பொருளையே சார்தலின் ‘பொருட்கு உரிமை பூண்டு
நிற்றலின்  உரிச்சொல்லாயிற்று’  என்னும்  கருத்தில்  மாறுபடவில்லை
எனலாம். இக்கருத்து ஏற்புடையதே. ஆதித்தர் கருத்தும் இதுவே.

“பொருளுக்கு உரிமை பூண்டது என்ற கருத்தில் உரிச்சொல் என்ற
பெயர்  வந்துளது  என்னலாம்”  என்று  தெ.பொ.  மீனாட்சி சுந்தரம்
பிள்ளையவர்கள்   கூறி,  இலக்கணப்  பொருள்  அல்லாத  பொதுப்
பொருளை   உடைத்தாகும்   உரிமையே  இங்குளது;  எனவே  இந்த
நோக்கில்   சொல்லின்   கருவாக   அமையும்   அடிச்சொல்லையே
உரிச்சொல்  குறிக்கின்றது என்றும் கூறினார.் அவர் பொருள் என்றது
வேர்ச்சொற்  பொருளையாம்.  (இலக்கண  ஆய்வுக் கட்டுரைகள், பக்
122, 123).

2, செய்யுட்  குரித்தாய்   வருதலின்   உரிச்சொல்   எனப்பட்டது
என்னும் காரணம் ஏற்புடையதாகுமா என்பதைப் பார்ப்போம்.

செய்யுட்குரிய சொற்களாகத் தமிழ் இயற் சொல் தமிழ்த் திரிசொல்,
திசைச்  சொல்,  வட  சொல்  என நான்கு கூறினார் தொல்காப்பியர்.
அவற்றுள்  தமிழ் இயற் சொற்கள் வழக்கிலும்  செய்யுளிலும் வருவன.
மற்றையன  வழக்கில் இல்லாதன; அல்லது அரிதாக  வருவன. தமிழ்த்
திரிசொற்கள்     புலவரால்     திரித்துக்     கொள்ளப்    படுவன.
இயற்சொல்லையே    திரித்துக்   கொள்வர்.   திரித்துக்   கொள்வது
செய்யுளில் ஆளவேண்டி


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 16:38:29(இந்திய நேரம்)