தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


xii

யாதலின்     திரிசொற்கள்    செய்யுளுக்கே    யுரிமையுடையனவாம்
அதனால் அத்திரி சொற்களையும்  உரிச்சொற்கள்  என்னல் வேண்டும்;
என்னாமையின்   செய்யுட்கு    உரிமை   பூணும்   காரணம்  காட்டி
உரிச்சொல்  என  ஒரு  பிரிவைக்  கூறவேண்டுவதில்லை.  அன்றியும்
உரிச்சொற்களும்  உலக  வழக்கில்  வட்டார  வழக்காக  ஆங்காங்கே
காணப்படுதலும் உண்டு. கடி என்னும் உரிச்சொல்   விரைவுப்பொருளில்
‘கடிய வா’ என்பது போலும் தொடர்களில்  செங்கல்பட்டு, வடார்க்காடு,
தென்னார்க்காடு,    சென்னை    மாவட்டங்களில்   ஆளப்படுகின்றது
காணலாம்.

நன்னூலார்,   ‘செய்யுட்குரியன  வுரிச்சொல்’  (நன். 442)  என்றார்.
அதற்குச்   சங்கர   நமச்சிவாயர்,   ‘செய்யுட்குரியவாய்ப்  பொருட்கு
உரிமை  பூண்டு  வருவன உரிச்சொல்லாம்”  என்று உரையெழுதினார்.
இவ்வுரையால் இவர் தடுமாற்றம் புரிகின்றது.  ஆனால் இவரே பின்னர்
“செய்யுட்குரியனவாதலின்  இவற்றிற்கு  உரிச்சொல் எனக் காரணக்குறி
போந்தது  என்பதூஉம்... உணர்த்தியவாறு” என எழுதினார். இதனால்
பொருட்கு  உரிமை  என்பதினும்  செய்யுட்குரிமை  என்பதே  சங்கர
நமச்சிவாயர் கொண்டனரோ எனக் கருத வேண்டியுளது.

பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி
ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர் வினை
ஒருவா செய்யுட் குரியன உரிச்சொல்         (நன் 442)

என்னும்     நன்னூற்   சூத்திரத்தில் ‘செய்யுட்  குரியன  உரிச்சொல்
என்பதை  மட்டும்  கொண்டு  யாவரும் உரிச்சொற் காரணம் கூறினர்.
பல்வகைப்  பண்பும்  பகர்பெயராகி  உரியன உரிச்சொல்; ஒரு குணம்
பல  குணம் தழுவியுரியன உரிச்சொல்; பெயர் வினை ஒருவா உரியன
உரிச்சொல்;  செய்யுட்குரியன  உரிச்சொல்  எனத்  தனித்தனிக் கூட்டி
உரிச்சொல்  இலக்கணம்  காண்போமாயின்,  கூறப்பட்ட யாவற்றுக்கும்
உரிமை   பூண்டன   உரிச்சொல்   எனக்  கொள்ளலாம்.  அதனால்
செய்யுட்கே  யுரிமை  பூண்ட காரணம் மட்டும்  கூறுவது பொருந்தாது.
நன்னூலார்    கருத்தும்   ‘செய்யுட்குரிமை   பூண்ட   காரணத்தால்
உரிச்சொல்லாயிற்று என்பதன்று’ என்னலாம்.

3. ‘பெயர்  வினைகளுக்கு   உரித்தாய்   வருதலின்   உரிச்சொல்
ஆயிற்று’ என்னும் கொள்கையும் ஏற்புடைத் தன்று.

இடைச்     சொற்களும்  பெயர்  வினைகளுக்குரியனவே. “பெயர்
வினைகளின் பண்பையுணர்த்தி அவற்றுக்கு உரிமை  பூண்டு நிற்பதால்
உரிச்சொல்  எனக் காரணப் பெயர் பெற்றது” (முதற் சூத்திர விருத்தி)
எனச் சிவஞான முனிவர் கூறுவது ஓரளவுக்கே


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 17:19:26(இந்திய நேரம்)