தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

xx

என்று   கூறல்  வேண்டும்.  அப்பொருளும்  இசை, பண்பு, குறிப்புப்
பற்றியமைதலின்  சொல்வோன் விளங்கக் கூறல்  வேண்டும். ஆதலின்
இப்பொதுமைக்    கருத்தும்    உரிச்சொற்களுக்குத்    தனியுரிமைக்
கருத்தாகும்.

சொல்லுக்குரிய  பொருளை  ஒருவன் சொல்லும்போது கேட்போன்
உணரும்   ஆற்றல்   உள்ளவனாயின்   உணர்வான்.   சொல்வோன்
எவ்வளவுதான்   ஆற்றலுடன்  சொன்னாலும்  கேட்போன்  உணரும்
ஆற்றல்   இலனாயின்   பயன்   இல்லை.(உரி.   95)   இக்கருத்தும்
பொதுமையானதாயினும் மேலே கூறியது போன்று உரிச்சொற்களுக்குத்
தனியுரிமைக் கருத்தாகும்.

பெயர்வினைச்  சொற்களுக்குப் பெரும்பாலும் காரணம் தோன்றும்;
இடுகுறிப்  பெயராயின்  காரணம்  தோன்றாது.  அதனால் ஒவ்வொரு
சொற்கும்  பொருட்காரணம்  காண்போமாயின்  விளங்காது.  (உரி.96)
இக்கருத்தும்   பொதுமைக்   கருத்தே.   எனினும்  உரிச்சொற்களுள்
யாதொன்றற்கும்    பொருட்காரணம்   காண   இயலாது.   ஆதலின்
இக்கருத்தும்  உரிச்சொற்களுக்குச்  சிறப்பானதாகும்.  மேலும் இடுகுறி
காரணப்பெயர் வினைகளன்றிப் பொருள் இடம் காலம் முதலியவற்றாற்
தோன்றும்  பெயர்ச் சொற்களும் வினைச் சொற்களும் எழுத்துகளைப்
பிரித்துக்   காணுதற்குரியன.   ஆனால்   உரிச்சொற்களுள்  எதுவும்
எழுத்துகளைப் பிரித்துக் காணற்கு இயலாது. (உரி.97)

எனவே நால்வகைச் சொற்களுக்கும் உரிய பொதுமைக் கருத்துகளே
உரிச்சொற்களுக்குத் தனியுரிமைக் கருத்துகளாம் என்னலாம்.


புதுப்பிக்கபட்ட நாள் : 07-09-2017 11:58:51(இந்திய நேரம்)