தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

xix

தாம்  உரியியலில் எடுத்து மொழியாத உரிச்சொல்லையும் உரியியற்
சூத்திரம்     ஒன்றில்       ஆண்டுள்ளார்.     அச்     சூத்திரம்
‘மொழிப்பொருட்காரணம்  விழிப்பத்  தோன்றா’  (உரி.  97)  என்பது.
அதில்  ‘விழிப்ப’  என்பது  ‘விளக்கம்’ என்னும்  பொருள் தருவதாம்.
காரணம்,  தோன்றா  என்பன  வந்தன கொண்டு ‘விழிப்ப’ என்பதற்கு
‘விளங்க’ என்னும் பொருள் கொள்ள நேர்ந்தது.

பொதுமையே தனியுரிமை

பெயர்,   வினை, இடை, உரி என்னும் நால்வகைச் சொற்களுக்கும்
பொதுவான    சில    கருத்துகள்   உரிச்சொற்களுக்குச்   சிறப்பாக
அமைவனவாகும்.      அதனால்      பொதுமைக்      கருத்துகள்
உரிச்சொற்களுக்குத் தனியுரிமைக் கருத்துகளாகும் என்னலாம்.

உரிச்சொல்   ஒன்றற்குப் பொருள்கூறின் அப்பொருட்குப் பொருள்
யாது  என  வினவின்  அதற்குப்  பொருள்  கூற இயலாது; கூறினும்
அதற்குப்   பொருள்  யாது  என  இப்படியே  செல்லும்.  ஆதலின்
பொருட்குப்  பொருள்  தெரிய  எண்ணினால் அதற்கு வரம்பு இராது.
‘உறு’ என்னும் சொற்குப் பொருள் ‘மிகுதி’ என்பது. ‘மிகுதி’ என்பதன்
பொருள்  யாது  எனின்  கூற  இயலாது.  இக்கருத்து  பெயர்வினைச்
சொற்களுக்கும்   பொருந்தும்.   அதனால்,   ‘பொருட்குப்  பொருள்
தெரியின்  அது  வரம்பின்று ‘(உரி. 93)’ என்னும் கருத்து நால்வகைச்
சொற்களுக்கும் பொதுமைக் கருத்தே.

ஒரு     சொற்குப்  பொருள் கூறுமிடத்து விளங்கும்படி கூறினால்
கேட்போனுக்கு   மயக்கம்   இராது.   அப்படித்  தெளிவாகக்  கூறல்
வேண்டும்  (உரி.  96)  ‘கடி’  என்னும்  சொல் பல பொருள் தருவது.
‘கடிநகர்’   என்றவிடத்தில்   பலபொருள்களுள்   ‘காவல்’   என்னும்
பொருளே  பொருந்தும்  என்பதை  விளக்கினால்  அதாவது கூர்மை,
அச்சம், விரைவு முதலிய பொருள்கள் பொருந்தாமல்  காவல் என்னும்
பொருளே  பொருந்தும்  என்பதை  விளக்கினால்  கேட்போன் நன்கு
விளங்கிக்  கொள்வான். எனவே கேட்போன் உணருவது சொல்வோன்
உணர்த்தும்   திறமையைப்   பொறுத்தது.   (உரி.  94)  இக்கருத்தும்
நால்வகைச்   சொற்களுக்கும்   பொருந்தும்   பொதுமைக்  கருத்தே.
ஆனால்,  இயற்சொற்களாகிய  பெயர்  வினைகளுக்குப் பெரும்பாலும்
வழக்குச்   சொற்களானமையால்   பொருள்  உணர்த்தல்  வேண்டிய
இன்றியமையாமையில்லை.   ஆனால்  உரிச்சொற்கள்  இசை,  பண்பு
குறிப்புப்  பற்றியனவாதலின்  எளிதிற் பொருள் உணரப் படாமையின்
இன்ன சொல் இன்ன பொருள்தரும்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 18:13:52(இந்திய நேரம்)