Primary tabs
xxiii
யாப்பருங்கல விருத்தியின் முதற்பதிப்பு ‘‘அமிர்தசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம்’’ என்றே வெளிப்பட்டது. அன்றியும் காரிகை, வீரசோழியம் இவற்றை எடுத்துக்காட்டி ‘‘ஆசிரியர் பெயர் அமிர்த சாகரனாரே என்பது ஐயுறவின்றித் துணியப்படும் என்றும் பதிப்பாசிரியர் குறித்துள்ளார். (திரு. பவானந்தம் பிள்ளை அவர்கள் பதிப்பு; 1916)
டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலைய ஏழாம் வெளியீடாகக் காரிகை வெளிப்பட்டது. அது, ‘அமிர்த சாகரனார் அருளிச் செய்த யாப்பருங்கலக் காரிகை’ என்னும் பெயர் தாங்கி வந்தது. மேலும் யாப்பருங்கலக் காரிகையின் ஆசிரியர் அமிர்த சாகரனார் என்பது, ‘‘இந்நூல் யாவரால் செய்யப்பட்டதோ எனின்..... அருந்தவத்துப் பெருந்தன்மை அமிர்தசாகரர் என்னும் ஆசிரியராற் செய்யப்பட்டது’’ என்பதனால் தெரிகிறது. அமிர்தசாகரர் என்ற சொல் அமுதசாகரர் என்றும் சுவடிகளில் காணப்படுகின்றது. யாப்பருங்கல விருத்தியின் பாயிரத்துள் இவர் பெயர் ‘அளப்பருங் கடற்பெயர் அருந்தவத்தோன்’ என்று குறிக்கப் பெற்றுள்ளது. அளத்தற்கு அரிய கடலினது பெயர் எனவே அஃது அமிதசாகரர் என்று இருத்தல் வேண்டும் என்று சிலர் கருதுவர். ஆனால், இந்நூலின் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்ட எல்லாச் சுவடிகளிலும் இப்பெயர் அமிர்தசாகரர் என்றோ, அமுதசாகரர் என்றோ காணப்படுகிறதே ஒழிய ஒன்றிலும் அமிதசாகரர் என்ற பெயர் இல்லை. கிடைத்த யாப்பருங்கல ஏடுகளின் தலைப்பிலும் அமிதசாகரர் என்ற பெயர் இல்லை. வீரசோழிய உரையிலும் அமுத சாகரனார் என்றே எடுத்தாளப்படுகிறது’’ என்று காரிகையின் நூலாசிரியர் வரலாறு விளக்குகின்றது. (உ.வே.சா. நூல்நிலைய வெளியீடு - 7. 1948)
நூலாசிரியரது வடமொழி இயற்பெயரை உணர்த்துவது ‘அளப்பருங் கடற்பெயர்’ என்றும், அளப்பரும் என்பது ‘அமித’ என்பதையும், கடல் என்பது சாகரம் என்பதையும் குறிப்பிட்டு அமிதசாகரர் என்ற ஆசிரியரை உணர்த்துவதாகும் என்றும் 1919 ஆம் ஆண்டில் ‘விவேக போதினி’ தொகுதி 12 பகுதி 1 இல் முதன் முதலாகத் திரு.அனவரதவிநாயகம்