தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


xxii

புறநடையாவது ஒரு நூலுக்கு அங்கமாக அமையும் பிறிதொரு நூலாகும். அவிநயரால் செய்யப் பெற்ற யாப்பு நூலுக்கு அங்கமாக அமைந்தது ‘நாலடி நாற்பது’ என்பது. அதனைக் குறிப்பிடும் யாப்பருங்கல விருத்தி ‘‘நாலடி நாற்பது என்னும் புறநடை’’ என்பது நோக்கத்தக்கது.

மேலும், யாப்பருங்கலம் இயற்றிய ஆசிரியரே காரிகையையும் இயற்றினார் என்பதை யாப்பருங்கல விருத்தி உரையாசிரியரும், கூறிப்போதுகின்றார்.

‘விரவியும் அருகியும்’ (யா.வி.15) என்னும் நூற்பாவுரையில் ‘‘இந் நூலுடையாரும் ‘மாஞ்சீர் கலியுட்புகா’ என்னும் இதன் புறநடையானும்.... விளங்கக் கூறினார் என்க’’ என வரைந்துள்ளார். ‘மாஞ்சீர் கலியுட்புகா’ என்பது 40 ஆம் காரிகையாம்.

‘மாவாழ்சுரம்’, புலிவாழ்சுரம்’ என்னும் இரண்டு வஞ்சியுரிச் சீரும் உளவாக வைத்து ஒருபயன் நோக்கித் ‘தூஉ மணி’ ‘கெழூஉ மணி’ என்று அளபெடையாக நேர்நடுவாகிய வஞ்சியுரிச்சீர் எடுத்துக்காட்டினார் நற்றத்தனாரும் வாய்ப்பியனாரும். அதுபோல இந்நூலுடையாரும் வெண்பா இறுதிச் சீருக்கு வேறு உதாரண வாய்பாட்டால் ஓசையூட்டுதற் பொருட்டாக, குற்றியலுகரம் ஈறாகிய ‘காசு’ ‘பிறப்பு’ என்னும் வாய்ப்பாட்டான் நேரீற்று இயற்சீருக்கு வேறு உதாரணம் எடுத்தோதினார் என்றவாறு’’ எனச் ‘‘செப்பல் இசையன’’ (57) என்னும் நூற்பாவில் விருத்தியுரை ஆசிரியர் வரைந்துள்ளார். காசு பிறப்பு என வெண்பா இறுதி வாய்பாடு கூறியது. ‘நேரிசை இன்னிசை போல’ எனத் தொடங்கும் 25ஆம் காரிகையாம்.

அமிதசாகரர்:

யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய இரண்டு நூல்களையும் இயற்றிய ஆசிரியர் அமிதசாகரர் என்னும் சமண முனிவர் ஆவர். அவர பெயர் அமிர்தசாகரர், அமுதசாகரர் என்றும் குறிக்கப்பெற்றன


.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-08-2017 17:48:40(இந்திய நேரம்)