Primary tabs
யாப்பருங்கலக் காரிகை
என்ற அந்நூல் உரையில் கூறப்பட்டிருப்பதனால் தெரிகிறது. யாப்பருங்கலம்
தொல்காப்பியத்தின் போக்கைப் பின்பற்றாமல் காக்கைபாடினியத்தைத் தழுவி
அமைந்துள்ளது. *யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை இவற்றின் உரைகளில்
காக்கைபாடினியாரின் சூத்திரங்கள் பல மேற்கோளாகக் காட்டப் பெறுவதனால் இது
புலனாகிறது.
யாப்பருங்க லம் 96-சூத்திரங்களைக் கொண்டுள்ளது. 96-சூத்திரங்களில்
யாப்பிலக்கணப் பரப்பை முற்றுற விவரித்தல் இயலாமையின் ஆசிரியர் விதப்புக்
கிளவிகளைச்
சூத்திரங்களிற் பெய்து, சூத்திரங்களிற் கூறாது விட்ட பொருளை உரையிற்
கொள்ளுமாறு
அமைத்தனர். பெருகக் கற்றார்க்கே அந்நூல் பெரிதும் பயன்படுதல்
நோக்கியும், அஃதும்
உரையின் உதவியின்றி விளக்கப்பொருள் கொள்ளுவதில்
இடர்ப்பாடு நிகழ்வதை எண்ணியும்
இளம் பக்குவிகளுக்கும் எளிதில் விளங்குமாறு
அமிர்த சாகர முனிவரே தம் யாப்பருங்கலத்துக்கு
அங்கமாகப் பொருளைச் சுருக்கியும்
விளக்கியும் யாப்பருங்கலக் காரிகையை அருளிச் செய்தார் 1/2 என்று கொள்ளல்
வேண்டும்.
யாப்பருங்கலப் புறனடை என்றும் வழங்கப்படும். ? ஒருநூலுக்கு அங்கமாக அமையும்
பிறிதொரு நூல் ‘புறனடை’ என்ற பெயருடன் வழங்கப்படுதல் தமிழ் வழக்
வழித்தாயதன்று. அது நேர்பசை நிரைபசை வேண்டாது காக்கைபாடினியார் போல
நாலசைப் பொதுச்சீர் வேண்டுவதனாலும், தாழிசை துறை விருத்தங்களைத்
தொல்காப்பியனார் முதலாயினார் போலக் கொச்சகக் கலிப்பாற் படுத்தாது
பாவினங்களென வகுப்பதனாலும், பிறவாற்றாலும் இனிது புலப்படும்’.
(தி. த. கனகசுந்தரம் பிள்ளை அவர்கள்.)
யாப்பருங்கலக் காரிகை என்னும் பெயர்த்து’ (கா. 1. உரை.)
? யா. வி. பக் 227, 250, 311, 329, 334.