தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கட

  
xii

யாப்பருங்கலக் காரிகை

 
     காங்கியம், குறுந்தொகை, கொன்றை வேந்தன், சந்தோவிசிதி, சிலப்பதிகாரம்,
சீவகசிந்தாமணி, சூளாமணி, திருக்குறள், திரு வெழுகூற்றிருக்கை (நக்கீரர்)’ தேசிக
மாலை, தொல் காப்பியம், நத்தத்தர் யாப்பு, நாலடி நாற்பது. நாலடி நானூறு,
நான்மணிக்கடிகை, நிருத்தம், பட்டினப்பாலை, பாளித்தியம், பிங்கலம், புறநானூறு,
புறப்பொருள் வெண்பாமாலை, மயேச்சுரர் யாப்பு, மலைபடு கடாம், மகாபாரதம்,
மார்க்கண்டேயனார் காஞ்சி. முத்தொள்ளாயிரம், முதுமொழிக்காஞ்சி, யாப்பருங்கலம்,
யாப்பருங்கல விருத்தி.

     இந்நூலைப் பற்றிய பிறசெய்திகள் நூலாசிரியர் வரலாறு, உரை யாசிரியர் வரலாறு
முதலியவற்றால் விளங்கும்.

     யாப்பருங்கலக் காரிகையை எந்தையாரான மகா மகோ பாத்தியாய டாக்டர்
ஐயரவர்கள் தம் இளம்பிராயத்தில் செங்கணம் விருந்தாசல ரெட்டியாரவர்களிடம் கற்றுக்
கொண்டார்கள். அந்த அஸ்திவார பலத்தினாலேயே பிற்காலத்தில் தாம் இலக்கணப்
புலமையை எளிதில் பெற இயன்றதென்று அவர்கள் அடிக்கடி கூறுவதுண்டு. அந்த
நன்றி யறிவின் பொருட்டு அவர்கள் யாப்பருங்கலக் காரிகையை மற்ற
நூல்களைப்போலக் குறிப்புரை முதலியவற்றுடன் வெளியிட்டு அதனை இவர்களுக்கு
அர்ப்பணம் செய்ய எண்ணியிருந்தார்கள், பல காரணங்களால் அவர்களுடைய
வாழ்நாளில் அது நிறைவேறாமற் போயிற்று. எனக்கு அது வருத்தமாக இருந்தது.
அவர்கள் தொகுத்து வைத்துள்ள குறிப்புகளைக் கொண்டும் காரிகைப் பிரதிகளைக்
கொண்டும் அப்பணியை ஒருவாறு நிறைவேற்றும் பேறு இப்போது எனக்குக் கிடைத்தது.

     செங்கணம் விருத்தாசல ரெட்டியாரிடம் காரிகை பாடங்கேட்ட வரலாற்றை
எந்தையார் தம் சுயசரிதத்தில் விரிவாக எழுதியுள்ளார். அதில் ஒரு பகுதியை இங்கே
தருகின்றேன்; இப்பகுதியிலிருந்து காரிகையை ஒருவர் எவ்விதம் பயில வேண்டு
மென்பது தெள்ளிதிற் புலனாகின்றது.

      ‘யாப்பருங்கலக் காரிகை பாடம் கேட்டது : நல்ல வேளையில் நான் காரிகை
படிக்கத் தொடங்கினேன். யாப்பிலக்கணத்தைப்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 18:48:05(இந்திய நேரம்)