Primary tabs
முகவுரை
xvii
அழகிய சிற்றம்பலக் கவிராயவர்கள் வீட்டுப் பிரதி.
எண். 757. இது 150, 177-ஆம் சுவடிகளைப் போன்றது. உறுப்பியற் பகுதி மட்டும்
உள்ளது.
எண். 804. மூலமும் உரையும் முற்றும். இதுவும் 380-ம் ஒன்றைப்பார்த்து
மற்றொன்று படி யெடுத்ததுபோலும். சாலிவாடீச்சுர ஓதுவார் பிரதி இது.
43-முடிய உள்ளது. சிதிலம். காரிகை விரித்துரை என்று இதில் குறிக்கப்பட்டுள்ளது.
எண். 952 மூலமும் உரையும். பூர்த்தி, சிதிலம். இதில் திருமறைக்
காட்டிலிருக்கும் வடமரில் கவுண்டினிய கோத்திரத்தாரில் மூப்பிலாரில் 1/2
நாராயணபட்டர் பிள்ளை வரகவி மகாதேவன் இயாப்பருங்க காரிகை எழுதி முடிந்தது
முற்றும். மேல் பிரதி குறும்பு நாட்டு விசயமங்கலம் நடராச பிள்ளை ஏடு’ என்று
எழுதப் பெற்றுள்ளது.
541, 601, 804, 952-என்ற எண்களை யுடையவைகள்.
உரையில் உதாரணங்களாகக் காட்டப்பட்ட மேற்கோள் இலக்கியங்களுக்குக்
குறிப்புரை, நூலாசிரியர் உரையாசிரியர்களின் வரலாறு, காரிகை, உரைச் சூத்திரங்கள்
உதாரண இலக்கியங்கள் ஆகியவற்றின் அகராதி முதலியவை இந்நூலிற் சேர்க்கப்
பெற்றுள்ளன.
இப்பதிப்பு இந்த வடிவில் வெளிவருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்
தமிழ்நூல்களிற் சிறந்த பயிற்சியுடையவரும்,