Primary tabs
யாப்பருங்கலக் காரிகை
பழக்கம் பெற்றவரும், இந்நூல் நிலையத்தின் பதிப்புக் குழுவின் தலைவருமாகிய
ஸ்ரீமான். ச. கு. கணபதி ஐயர், பி. ஓ. எல். ஆவார். அவருக்கும், பதிப்பு வேலையில்
உடனிருந்து சுவடிகளை ஒப்பு நோக்குதல், பிரதிசெய்தல் முதலியவற்றைக் கருத்துடன்
கவனித்து வந்தவர்களாகிய ஸ்ரீமான்கள் தமிழ்ப்பண்டிதர். எல். ஸ்ரீநிவாஸ ஐயர்,
வியாகரண சிரோமணி, தி. இராமாநுஜ ஐயங்கார், ஆர். பாலகிருஷ்ண ஐயர்
முதலியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைச் செலுத்கின்றேன்.
இந்நூல் நிலையத்தை மிக்க ஊக்கத்துடன் பாதுகாத்தும் நூற்பதிப்பு விஷயத்தில்
அளவற்ற கவனத்தைச் செலுத்தியும் வரும் இந்நூல் நிலையத்தின் அத்யக்ஷரும்
அருங்கலை விநோதருமாகிய ஸ்ரீமதி. ருக்மிணி தேவியாரவர்களுடைய சிறந்த
தமிழபிமானம் யாவராலும் போற்றற்குரியது.