Primary tabs
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய முன்னுரை
உருப்பளிங்கு போல்வாள்என் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்.
நேமிநாதம் என்னும் இந்நூல் எழுத்து இலக்கணத்தையும்
சொல்
இலக்கணத்தையும் சுருக்கிக் கூறும் நூல் ஆகும். அதனால், இதனைச்
சின்னூல் என்று கூறலாயினர். இஃது எழுத்து அதிகாரம் சொல் அதிகாரம்
என்னும் இரண்டு அதிகாரங்களை உடையது. இது தொல்காப்பியத்தை முதல்
நூலாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல் ஆகும். அதனை இந்நூலின்
இரண்டாம் அதிகாரமாகிய சொல் அதிகாரம், தொல்காப்பியச் சொல்
அதிகாரம் போல ஒன்பது இயல்களாக அமைக்கப்பட்டிருப்பதனாலும் அதன்
இயல்களின் பெயர்களே சிறிது சிறிது மாற்றி இதன் சொல் அதிகார
இயல்களின் பெயர்கள் ஆக அமைக்கப்பட்டிருப்பதனாலும் அறிதலாகும்.
அவை வருமாறு:
இந்நூலின் முதல் அதிகாரம் ஆகிய எழுத்ததிகாரம் இயல்கள் என்னும் உட்பிரிவுகள் இன்றி ஒன்றாகவேஇருக்கின்றது.