தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

‘நேமிநாதம்' என்னும் பெயர்த்து என இந்நூற்பாயிரம் கூறுதலான், இந்நூல் ஆசிரியர் காலத்து மயிலையில் இருந்த அக்கோயில் ஜைநர்களால் நன்கு போற்றப்பட்டிருந்தது என்பது இனிது விளங்குதல் அறிக.

இந்நூல் ஆசிரியர்காலம் திரிபுவன தேவன் என்னும் வேந்தன்காலம் ஆகும். அதனைக் காலம் என்பது இன்னார் காலத்து இந்நூல் செய்தது என்றல். இந்நூல் யார் காலத்துச் செய்ததோ ? எனின், குருத்தவா மணிமுடிக் கொற்றவர் கோமான் திருத்தகு மணிமுடித் திரிபுவன தேவன் என்னும் அரசன் காலத்திற் செய்தது என்று உணர்க என வெண்பாப் பாட்டியலின் உரைப்பாயிரத்திற் கூறியதனான் அறிக.

திரிபுவன தேவன் என்பது குலோத்துங்கன் என்னும் பெயரை உடைய சோழர்களுள் ஒருவன் பெயர் என்பதும், திரிபுவன தேவன் என்னும் பெயர் கொண்ட குலோத்துங்கச்சோழன் காலம் எண்ணூறு வருடங்கட்கு முற்பட்டதாம் என்பதும் இராமநாதபுரம் சமத்தான மகா வித்துவான் பாஷா கவிசேகரர் உ.வே.ரா. இராகவ ஐயங்கார் அவர்கள் தாம் பார்வையிட்டு வெளியிட்ட நேமிநாதத்தின் முக உரையில் இவருடைய காலம் இற்றைக்கு 800 வருடங்கட்கு முன் இருந்த திரிபுவன தேவன் எனப் பெயரிய குலோத்துங்க சோழன் காலம் ஆகும் எனக் கூறியிருப்பதனால் தெரிகின்றன. அவற்றை ஆய்ந்து கொள்க.

இந் நூலாசிரியரின் ஊராகிய களந்தைப்பதி என்பது,
 

 
தன்னூர்ச் சனகையிற் சன்மதி மாமுனி தந்தமைந்தன்
நன்னூல் உரைத்த பவணந்தி மாமுனி நற்பதியும்
சின்னூல் உரைத்த குணவீர பண்டிதன் சேர்பதியும்
மன்னூ புரத்திரு அன்னமின் னேதொண்டை மண்டலமே.

 
 

- தொண்டைமண்டல சதகம், செ.32.

 
 
 
 

என்னும் தொண்டைமண்டல சதகச் செய்யுளால் தொண்டை மண்டலத்தின்கண் இருப்பதாகத் தெரிகின்றது. அது ‘களத்தூர்' என்பதன் மரூஉ மொழி எனத் தோன்றுகின்றது. களத்தூர் என்பது தொண்டைமண்டலத்துக் கோட்டங்கள் இருபத்து நான்கனுள் ஒன்று என்பதும், காஞ்சிபுரத்திற்குத் தென்கிழக்கில் முப்பது மைல்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-09-2016 23:59:27(இந்திய நேரம்)