தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thandi-Alangaram

தொல்காப்பிய உவமவியல்
தண்டியலங்காரம்
 
2.
ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமை கூறுங்கால் மேற்கூறிய நான்கினுள் ஒவ்வொன்றேயன்றி விரவியும் உவமிக்கலாம்.
மேற்காட்டிய நூற்பாவில் 'என்றிவற்றின் ' என்ற மிகையால் இக்கருத்து உரையாசிரியரால் கொள்ளப்படுகிறது.
3.
சுட்டிக்கூறா வுவமை.
தொகை யுவமை.
4.
'முதலும் சினையுமென்றாயிரு பொருளும் நுதலிய மரபின் உரியவை உரிய' என்ற நூற்பாவில் பேராசிரியர் 'உரிய' என்னாது 'உரியவை' என்ற மிகையால் ஒரு பொருளை ஒரு பொருளோடு உவமிக்கும் பொழுது திணையும் பாலும் மயங்கியும் வரலாம் என்பர்.
' மிகுதலும் குறைதலும் தாழ்தலும் உயர்தலும், பால் மாறுபடுதலும் பாகுபாடுடைய' என்ற நூற்பாவில் ஆசிரியர் இக்கருத்தினைக் கூறுவர்.
5.
' பொருளே உவமம் செய்தனர் மொழியினும் மருளறு
சிறப்பின் அஃ(து) உவமமாகும்.'
இதனை விபரீத வுவமை என்பர்.
6.
உவமப்போலி.
ஒட்டணி.
7.
' வேறுபட வந்த உவமைத்தோற்றம் கூறிய மருங்கிற் கொள் வழிக் கொளாஅல்' என்ற நூற்பாவில், இதுகாறும் கூறிய உவமை யிலக்கணத்து வேறுபட வருவனவெல்லாம் கொள்க என்பர்.
தண்டியாசிரியர் உவம யணியின் வகையாகக் கூறியிருப்பன பலவும், தொல்காப்பியர் கூறிய இவ்விலக்கணத்தில் ஒருவாறு அடக்கிக் கொள்ளலாம்.
8.
தடுமாறுவமம்.
இதரவிதரவுவமை.
9.
'அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே'.
மாலை யுவமை. (சந்தானவுவமை)
10.
'நிரனிறுத் தமைத்தல் நிரனிரை.'
நிரனிறை உவமையணி.
 
தண்டியலங்காரத்தில் கூறப்பட்ட பொருளணிகள் 35. தொல்காப்பியத்தில் இவற்றை யொத்துக் காணப்படுவன மிகச் சிலவே. ஆதலின் தொல்காப்பிய உவம இயலை அடிப்படையாகக் கொண்டே,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 00:10:35(இந்திய நேரம்)