அடியேனைச் இச்சீரிய பணிகளுக்கெல்லாம்
 ஆளாகுமாறு ஆட்கொண்டருளுகின்றவர்கள் , திருப்பனந்தாள் ஸ்ரீ
 காசிமடத்து அதிபர்
  ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித்
 தம்பிரான் சுவாமிகள் அவர்கள் ஆவார்கள்.
 அவர்களின் திருவடிமலர்களைப் பன்முறையும் வணங்குகின்றேன்.
 
	 
	
		இந்நூல்
 வெளிவருங்கால் இன்முகம் குன்றாது அச்சுப் படியைத்
 திருத்தி யுதவியர்கள் என் ஆசிரியப் பெருந்தகையான
 திருவாளர் தி.வே.கோபாலனார்,
 எம்.ஏ., பி.ஓ.எல். அவர்கள் ஆவர். அவர்களுக்கு என்
 நன்றியும் வணக்கமும் உரிய.
 
	 
	
		இந்நூலை விரைவாகவும், செம்மையாகவும்
 அச்சிட்டுதவிய ஜெமினி
 அச்சகத்தின் உரிமையாளர் அவர்கட்கும், அங்குப்
 பணிபுரியும் அலுவலர்களுக்கும் என் நன்றியறிதலைத்
 தெரிவித்துக்கொள்கிறேன்.
 
	 
	
		இந்நூல் சென்னை, மதுரை, அண்ணாமலைப்
 பல்கலைக் கழகத்து இடைநிலைத் தேர்வு மாணாக்கர்களுக்கும், B.A., M.A.,
 மாணாக்கர்களுக்கும் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
 தமிழறிஞர்களும், மாணாக்கர்களும் இந்நூலை
 வாங்கிக் பயன்படுத்தி, என்னை இத்துறையில்
 மேலும் ஊக்குவிக்குமாறு வேண்டுகிறேன்.
 
	 
	
		இந்நற்பணியில் ஈடுபடுத்தி ஆட்கொண்டருளும் இறைவனின் திருவடிகளை மனம் மொழி மெய்களால் வழிபடுகின்றேன்.
 
	 
	
		 
		'பிறையார் சடையண்ணல்
 மறையார் மருதரை
 நிறையால் நினைபவர் குறையார் இன்பமே'
 
		 
	 
	
		
		 
		
		இங்ஙனம்
கு.சுந்தரமூர்த்தி
முதல்வர்