Primary tabs
ix
ஒரு நூலைப் பதிப்பிக்குங்காலத்தில் உளவாகும் காலப்போக்கு பொருட்செலவு உழைப்பு முதலியவற்றைக்காட்டிலும் அதனைத் தேடுதலிலும் பரிசோதித்தல் முதலியவற்றிலும் உளவாகும் காலப்போக்கு முதலியன எத்தனையோ மடங்கு அதிகமென்பது சொல்லாமலே விளங்கும்.
பழைய தமிழ் நூல்களின் பரிசோதனைக்கு உடனிருந்து உதவி செய்வோர்கள் விஷயத்தில் எனக்குச் சிறிதும் பொருட் கவலை யுண்டாகாதபடி ஸ்ரீஸேது ஸமஸ்தானாதிபதிகளும் மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர்களும் சென்னைச் சட்ட நிரூபண சபை அங்கத்தினர்களுமான கௌரவம் பொருந்திய ம-ள-ள-ஸ்ரீ பா. இராஜராஜேசுவர ஸேதுபதி மஹாராஜா அவர்கள் கைம்மாறு கருதாமற் சில வருடங்களாகப் பேரன்புடன் பொருளுதவிசெய்து ஆதரிக்கின்றார்கள்.இவர்களுடைய பெருந்தகைமையும் வண்மையும் வித்தியாபிமானமும் மிகவும் மதிக்கற்பாலன.
இவ்வுரைப் பரிசோதனைக்குக் கருவியாக இருந்த பிரதிகள் 15;முற்றுமுள்ளவை 6; அபூர்த்தியானவை 9. அவை வருமாறு:-
பிரதி
பிள்ளையவர்கள்
ம-ள-ள-ஸ்ரீ பொன்னம்பலம் பிள்ளையவர்கள்
ம-ள-ள-ஸ்ரீ சாமிநாத பண்டிதரவர்கள்
வித்துவான் ஸ்ரீமத் உ.வே. A. M. அப்பு சடகோப
ராமானுஜாசாரியரவர்கள்
* இஃது ஆழ்வார் திருநகரி, ஸ்ரீ அரங்கநாத கவிராயரவர்களால் எழுதப்பெற்றது; இதனை ஸேது சமஸ்தான வித்துவான் ஸ்ரீமத் உ.வே.ரா. இராகவையங்காரவர்கள் வருவித்து உபகரித்தார்கள்.