Primary tabs
xviii
இந்நூற் பொருளையும் இதன் பெயரையும் அமைத்து
நலமுறப்பாராட்டிய
தமிழ்நூல்களுமுண்டு; அவற்றுட் சில
வருமாறு:-
‘‘ குறில்வழி லகரந் தனிநிலை யாயுங் கூடிய தகரமுன் னெழுத்தென்
றறிகுறி வடிவந் திரிதல்போ னந்தி யடல் விடை மெய்திரிந் துறினும்
நறுமலர் விழியிற் கண்டவ ரெல்லா நந்தியே யென்றுள மகிழ்ந்தார்.’’
‘‘ புன்றுரும்பு போன்றலைந்தார் போற்றுமவி கரரிமுனஞ்
சென்று வருசொற் றிரிதல்போன் - மென்றளிராம்
மேனிதிரிந்தார்.’’
‘‘ சிற்றதி காரங்களெலாந் தேவர் முதலாக
உற்றவதி காரிகளுக் கோர்ந்தளித்தான் - முற்றுலகாள்
பேரதிகா ரந்தனைத்தான் பேணுந் திருத்தணிகை
யூரதிகா ரன்றேர்வந் துற்றிடலும் - காரிகையு
நன்னூ லிடையைய நண்ணிப் பணிந்தெழுந்து
முன்னூ லுரையகல மோகித்தாள் - பன்னூலும்’’
‘‘ செறிப்புறு வான்புகழ்க் கோடீச்சு ரேசர் சிலம்பிடைநாம்
உறுப்பமை நன்னூ லிடைநீடு மைம்பா லுறுதொடர்பைச்
சிறப்புறு கேள்வி பெறுபாங்க னுக்குத் தெளிவுபெறக்
குறிம்பினு மோதும் வெளிப்படைச் சொல்லினுங் கூறுதுமே.’’