தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


vii

சாராராகக் கூறப்படும் பெருமை பெற்றவர் திருவாரூர்ப் பிறந்தவராவார்.

“போற்றிசைத்துப் புரந்தரன்மால் அயன்முதலோர்[புகழ்ந்திறைஞ்ச
 வீற்றிருந்த பெருமானார் மேவியுறை திருவாரூர்த்
 தோற்றமுடை உயிர்”

என ஆரூரில் பிறப்பெடுத்த உயிரினைச் சேக்கிழார் பெருமானும் சிறப்பித்தல் உளங்கொளத் தக்கது. இந் நூலாசிரியர் இத்தகைய திருவாரூரிலே “எம்பிரான் எந்தை தந்தை தந்தைதம் சுற்றம் எல்லாம்-தம்பிரான் நீரே என்று வழிவழிச் சார்ந்து” சிவபெருமான் அடியலால் பேணாப் பரம்பரைச் சைவாசாரியார் மரபிலே “பிறவித் துன்பம் முழுவதையும் போக்கும் தவத்திற்கு ஓர் அணை’ என்று சிறப்பிக்கப்படும் தவவணைக்குடியில், ‘வன்மீகநாததேசிகர்’ என்ற சான்றவருக்கு முதல் துணை வியார் பெற்றெடுத்த மகனாராகத் தோன்றினார். எத்தனை தகுதியுடையாரும் உலகியலின் ஓக்கம் தாழ்வு என்பனவற்றைக் கடத்தல் இயலாதாகவே, இளமையிலேயே தாயாரை இழந்த இவர், தந்தையார் பரிவு எத்துணையளவினதாயினும் மாற்றாந் தாயாரின் அரவணைப்புக் குறைவினால் ஓரளவு நலிவுற்றார் எனினும், சில ஆண்டுகள் தந்தையாரிடமே கல்வி பயின்ற பின்னர், அவருடைய மாணாக்கரும், திருவாரூர் ஸ்ரீவசந்த தியாகேசருடைய அபிடேகக் கட்டளை அன்னதானக் கட்டளைகளின் நேர்முகஅறங்காவலரும் ஆக வீற்றிருந்த ‘அகோர முனிவர்’ என்ற பெருந்துறவியாருடைய பராமரிப்புக்கு, அவர் அருகிலேயே இருந்து, தென்மொழி வடமொழி இரண்டனையும் துரிசறக் கற்கும் பெரு வாய்ப்புப் பெற்றார். தம் ஆசான் மகனாருக்குக் கல்வி கற்பிப்பதனைத் தம் உயரிய கடமைகளில் ஒன்றாகவே கொண்ட அகோர முனிவர் வைத்தியநாத தேசிகரை மொழித் திறத்தின் முட்டறுத்த புலவராக்கியதோடு ஆன்மிக நலனும் சான்றவராக்கினார்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-08-2017 19:01:36(இந்திய நேரம்)