தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


x

அவர்கருத் தறியா தவரவர் கருத்தினுட்
கொண்ட பொருள்படப் பொருள்கூ றுவரே
ஒருவிதி தனக்கே பலபெயர் வருமே
ஒருபெயர் தனக்கே பலவிதி வருமே
நூலுரை போதகா சிரியர் மூவரும்
முக்குண வயத்தான் முறைமறந் தறைவரே
இம்முறை யெல்லாம் எவர்பகுத் தறியினும்
அவத்தை வயத்தால் அலைகுவர் திடனே.”           நூற்பா-6

“நூல்செய் தவனந் நூற்குரை எழுதல்
முறையோ யெனிலே யறையக் கேணீ
முன்பின் பலரே யென்கண் காணத்
திருவா ரூரிற் றிருக்கூட் டத்திற்
றமிழ்க்கிலக் காகிய வயித்தி நாதன்
இலக்கண விளக்கம் வகுத்துரை யெழுதினன்
அன்றியும் தென்றிசை யாழ்வார் திருநகர்
அப்பதி வாழும் சுப்பிர மணிய
வேதியன் றமிழ்ப்பிர யோக விவேகம்
உரைத்துரை யெழுதின னொன்றே பலவே’           உரைநூற்பா-7

இடையிடையே வைத்தியநாதர் வேற்றிடங்களுக்கும் சென்று தம் புலமைத் திறத்தை வெளிப்படுப்பாராயினார். இவர் மலையாளஞ் சென்று ஆண்டுச் செங்கோல் ஓச்சி வந்த குறுநிலமன்னர் மீது பிரபந்தங்கள் பாடிப் பல பரிசுகளும் முற்றூட்டுக்களும் பெற்றார்; அங்கு இருந்த புலவர் பலராலும் புகழப்பெற்றார்.

இவர் காலத்தில் வாழ்ந்த பெரும்புலவர் அந்தகக் கவிவீரராகவ முதலியாராவர். அவர்,


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-08-2017 19:10:31(இந்திய நேரம்)