Primary tabs
xviii
யாகவும் குகரச் சாரியையாகவுமே கொண்டுள்ளார், அத்துச் சாரியை புணர்ச்சிக்கண் அமையுமாற்றைத் தொல்காப்பியனார் கூறுமாறு ஓராற்றான் குறிப்பிடுகிறார் சாரியைகளைத் தொல்காப்பியனார் விதந்து கூறுமாறு ஈறுகள்தோறும் எடுத்து விதப்பதனை விடுத்து, நன்னூலார் மதத்தை உட்கொண்டு பொதுவாகச் சாரியை வருதலும் தவிர்தலும் விகற்பமுமாகும் என்றே கூறி யொழிகிறார். இச் சாரியைகளை அமைப்பதும் தவிர்வதும் இலக்கியங்கண்டு இலக்கணத்தைப் பயன்கொள்ளும் ஆன்றோர் கடனாகும் என்று சொல்லி, விகுதிப்புணர்ச்சி பதப்புணர்ச்சி உருபுபுணர்ச்சி இவற்றில் சாரியை வேண்டியும் வேண்டாதும் நிற்குமாற்றை நச்சினார்க்கினியர் உரைத்த சில எடுத்துக்காட்டுக்களை உட் கொண்டு விளக்குகிறார்.
பின், எழுத்துக்கள் ஒன்று பலவாதலை ஓசை வேற்றுமையான் அன்றி வரிவடிவான் அறியலாகாது என்பதனைத் தொல்காப்பிய நூற்பாக்களைக் கொண்டே நுவல்கிறார்.
நீரோடு கூடிய பால்போலப் புள்ளியீற்றுமுன் வரும் உயிர்மெய்யோடுகூடி உயிர்மெய் ஆகுமாற்றைவிளக்கும் இவர், குற்றியலுகர ஈற்றின்முன்னும் வருமொழியின் தொடக்கத்தில்வரும் உயிர்ஏறி முடிய அக்குற்றியலுகர ஈறு இடங்கொடுக்குமாற்றையும், வருமொழியின் தொடக்கத்தில் ய க ர மெய்வரின் நிலைமொழி யீற்றுக் குற்றிலுகரம் தான்கெட்டுக் குற்றியலிகரத்திற்குஇடன் தருமாற்றையும் விளக்குகிறார். இவ்விடங்களிலெல்லாம் நச்சினார்க்கினியமே காணப்படுகிறது.
அடுத்துத் தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டுமாற்றையும், தன்னொழி மெய்முன் ய வரின் இகரம் துன்னும் என்று கொள்ளும் சிறுபான்மையினர் கருத்தினையும் சுட்டுகிறார்.