தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


xxxvii

வகரஈற்றுச் சுட்டுப்பெயர் நாற்கணத்தொடு புணரும் போது ஏற்படும் புணர்ச்சி வேறுபாடுகளை நன்னூலை ஒட்டி ஒரே நூற்பாவினால் குறிப்பிடும் இவர், நச்சினார்க்கினியர் வவ்விறுசுட்டு வன்கணத்தொடு புணர்ந்து உண்டாக்கும் அஃகடிய முதலியனவே இக்காலத்து அரிய என்று கூறியிருப்பவும், வகர ஈற்றுப்புணர்ச்சிகள் யாவும் இக்காலத்து அரிய என்று கூறியிருப்பது ஆராயத் தக்கது.

தெவ் என்ற உரிச்சொல் படுத்தல் ஓசையால் பெயராயவழி, அது வருமொழியொடு புணருங்கால் ஏற்படும் திரிபுகளை நன்னூலை ஒட்டியே விளக்குகிறார்.

‘உருபின் முடிபவை’ என்ற நூற்பாவில், உருபு புணர்ச்சிப் பகுதிக்கண் அமைந்த நூற்பாச்செய்திகளைத் தலைப்பெய்து, அவற்றைப் பொருட்புணர்ச்சிக்கும் பொருத்தி விளக்கிக்காட்டும் திறன் இவர் நுணுக்கமாக ஈட்டிய பேரறிவினை நுவல்வதாகும். அதனொடும் அமையாது, தொல்காப்பிய உருபியல் உரையில் நச்சினார்க்கினியர் மிகையாற் கொண்டவற்றையும் நுணுகி ஆய்ந்து இடன்நோக்கி இயையப் புணர்த்த பெற்றி அழகிது.

இறுதி நூற்பாவை இவ்வியற் புறனடையாகக் கொண்டு, இடைச்சொல், உரிச்சொல், வடச்சொல் இவற்றிற்கும் போலிச்சொற்களுக்கும் மரூஉ முடிபுகளுக்கும் புணர்ச்சிவிதி கூறும் இவர், மரூஉ முடிபை மிக விரிவாக ஐயமற விளக்கிய செய்தியும், தொல்காப்பிய எழுத்துப் படலத்தைச் சார்ந்த ஈற்றயல் நூற்பாவாகிய ‘உயிரும் புள்ளியும் இறுதியாகி’ என்பதன்கண் காணப்படும் செய்திகளையும் நச்சினார்க்கினியர் எழுத்துச் சொற்படலங்களில் பண்புப் பெயர்ப்புணர்ச்சி பற்றிக் கூறியுள்ள செய்திகளையும் இயைத்து உடன்விளக்கிய செய்தியும் இவர்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 20:27:09(இந்திய நேரம்)