தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


சிறிதளவு மாற்றம்பெற்ற நன்னூல்
நூற்பாக்கள்

2
எண்பெயர் முறைபிறப் பிருவளவு முதலீ
றிடைநிலை போலியொடு பதம்புணர்ப் புளப்பட
வாறிரு பகுதித் ததுவென மொழிப.

நன் 57
3
மொழிக்கா ரணமா நாதகா ரியவொலி
எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே.

58
6
அகர முதலவீ ராறுமுயி ரவற்றுள்
அஇ உஎ ஒக்குறில் ஆஈ
ஊஏ ஐஓ ஒளநெடில் அஇ
உஇவை மொழி முதல் வரின்சுட் டெய்யா
முதலு மாவோ விறுதியு மேயிரு
விழியும் வினாவென வழங்கு மென்ப.

63-67
7
ககர முதல்மூ வாறுமெய் யவற்றுள்
கசட தபற வல்லெலுத்து மெல்லெழுத்து
ஙஞண நமன இடையெழுத் துணரின்
யரல வழள வென்மனார் புலவர்.

68-70
11
அவற்றுள் முயற்சியுள் அஆ அங்காந்
திஈ எஏ ஐகா னதனோ
டண்பல் முதனா விளிம்புற உஊ
ஒஓ ஒளகா னிதழ்குவிந் தியலும்.

76-78
15
யகரம் வரக்குற ளுத்தப வரூஉ
மிகரமு மியாவி னிகரமுங் குறிய.

93
16
நெடிலோ டாய்த முயிர்வலி மெலியிடை
தொடர்மொழி யிறுதி வன்மையூ ருகர
மஃகு மென்மனா ராயுங் காலே.
94

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 20:29:51(இந்திய நேரம்)