Primary tabs
LIII
குறிலிணை குறிற்கீழ் மொழியிடை யிறுதியி
னளபெழு மவற்றோ டாயுங் காலே.
மெய்மயக் குடனிலை ரழவொழித் தீரெட்
டாகு முயிர்மெய் மயக்கள வின்றவை
தேருங் காலை மொழியிடைச் சிவணும்.
ஞநமுன் னினமும் யகரமும் டறமுன்
கசபவும் ணனமுன் இனமுங் கசஞப
மயவவு மம்முன் பயவவும் யரழமுன்
மொழிமுதன் மெய்யும் லளமுன் கசப
வயவு நின்று மயங்கு மென்ப.
யெய்தி னையொத் திசைக்கு மவ்வோ
டுவ்வும் வவ்வு மௌவோ ரன்ன
விகர யகர மிறுதி விரவும்
புகரின் றுணர்ந்தோர் வரைந்தனர் போற்றல்.
மிருமைக் குறிலொற் றிவற்றொடு கரமுமா
மின்னசா ரியைபெறூஉ மெவ்வழி யானு
மெய்யி னியக்க மகரமொடு சிவணும்.
சந்தி விகார மாறினு மேற்பவை
முன்னிப் புணர்த்தது முடித்தனர் கொளலே.
திறந்த காலந் தருந்தொழி லிடைநிலை.