Primary tabs
LIV
புணர்வழி யொன்றும் பலவும் சாரியை
வருதலும் தவிர்தலும் விகற்பமு மாகு
மனையவை தெரித லறிவோர் கடனே.
யுயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையு
முயிர்வரி னுடம்படு மெய்யென் றாதல்
வரைவின் றென்மனார் மதிக்குங் காலே.
வலிவரி னியல்பா மவற்றீற் றுயிர்முன்
வன்மை மிகாசில விகாரமா முயர்திணை.
ருயிரும் யகரமு மெய்தின் வவ்வும்
பிறவரி னவையுந் தூக்கிற் சுட்டு
நீடலும் யகர நிலவலு நெறியே.
யவ்வன் மெய்வரி னவ்வுறு நவ்வுக்
கவ்வு மாகும் வேற்றுமைக் கென்ப
செவ்விதி னவ்விய றெரியுங் காலே.
வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே.
னைபோ யம்முந் திரள்வரி னுறழ்வு
மட்டுறி னைகெட் டாவு மாம்பிற.
யாவினா விவற்றுமுன் வல்லெழுத் தியல்பே.
னியல்பும் வலிமெலி மிகலுமாம் வேற்றுமை.