Primary tabs
LVIII
கண்ணுற் றடைய யகாரமு மண்ண
நுனிநா வருட ரழவு மண்பன்
முதலு மண்ணமு முறையினா விளிம்பு
வீங்கி யொற்றவும் வருடவும் லளவு
மேற்பல் லிதழுற வகாரமு மண்ண
நுனிநா வொற்ற றனவுந் தோன்றும்.
மவ்வொடு முன்னுரு வாகியு மேனை
யுயிரொடு திரிந்து மேறிய வுயிரி
னளவா யதனுரு வடக்கி முந்துயிர்த்த
லுயிர்மெய் யென்மனா ருணர்ந்திசி னோரே.
தத்த மொத்த குற்றெழுத் தோடள
பெழூஉ மையௌ இஉ என்னு
மாயீ ரெழுத்தோ டளபெழு மென்ப.
வகார மிசையு மகாரங் குறுகும்.
றாய்தமொற் றிய்யுக் குறுமை யரைகுறண்
மஃகான் கான்மாத் திரைபெறு மதுதான்
கண்ணிமை நொடியென நுண்ணியோ ருரைப்ப.
மாவைந் தெழுத்தொடு சவஞய வுளப்பட
வவ்வொன் பானுயிர் மெய்யு மொழிமுதல்.
ஒஓ வலவொடு வகாரமும் ஆஎ
ஒவ்வொடு ஞகாரமு மாவொடு யகாரமு
முதலு மென்மனார் முறையுணர்ந் தோரே.
 
						