தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


இவ்வாசிரியரே யாத்த நூற்பாக்கள்.

1
மலைமக ளொருபால் மணந்துல களித்த
தலைவனை வணங்கிச் சாற்றுவ னெழுத்தே.

4
உயிரு முடம்புமென முதலிரு வகைத்தவற்
றுயிரீ றாறுமெய் மூவா றென்ப
வம்முப் பானு மதனது விரியே.

5
குற்றிய லிகரங் குற்றிய லுகர
மாய்தமொ டுயிர்மெ யீரள பையௌ
மஃகான் குறுக்க முள்ளுறுத் தொன்பதுஞ்
சார்பின் பால வென்மனா ரவற்று
ளுயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுயி ரளபே
ழொற்றளபு பதினொன் றொன் றொன் றேனைய
வாயிரு நுற்றெண் ணைந்துமதன் விரியே.

8
தோற்ற மளபு செய்கை பொருள்வடி
வேற்றன வொத்தலி னேற்புடை யினத்தினுஞ்
சிறப்பினு நெறிப்படச் செறிந்தீண் டம்முத
னடத்த றானே முறையெனல் வேண்டும்.

9
உயிருழப் புதானனி னாத முச்சி
மிடறுர மூக்குற் றிதழ்நாப் பல்லணத்
தடைந்து பின்ன ரவற்றது வினையான்
வேறுவே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே.

10
அவ்வழி யாவி யிடைமிட றுச்சி
வன்மை மென்மைமூக் கிசையிற் றோன்றும்.

12
முதலிடை நுனிநா அண்ணமுற முறையின்
கஙவுஞ் சஞவும் டணவு மண்ப
லடிநா முடியுறத் தநவு மீகீ
ழிதழுறப் பகார மகார மிரண்டு.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 20:30:45(இந்திய நேரம்)