தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


LXVIII

ளகரம் அண்ணத்தை நாவிளிம்பு வீங்கி வருடலானும், வகரம் மேற்பல்லைக் கீழுதடு பொருந்துதலானும், றன மேல்வாயை நுனிநா அழுத்தித் தடவுதலானும் பிறக்கும் என்பதும்.
                                                                         12

ஆய்தம் அங்காத்தலானும் நெஞ்சு ஓசையானும் பிறக்கும் என்பதும், சார்பெழுத்துக்கள் தம் முதலெழுத்துக்களின் பிறப்பிடமும் முயற்சியுமே கொண்டும் பிறக்கும் என்பதும்.
                                                                         13

ஒலித்தலிடையே எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்கல் இவற்றால் சிறிது வேறுபாடு ஏற்படும் என்பது.
                                                                         14

யகரம் வருமொழி முதலில் வருதலால் நிலை மொழி இறுதிக் குற்றியலுகரம் கெட வரும் இகரமும், மியா என்ற அசைச் சொல்லின் இகரமும் குற்றியலிகரமாம் என்பது.
                                                                         15

குற்றியலுகரம் தனிநெடிற் பின்னும், தொடர் மொழியில் ஆய்தம் உயிர் வலி மெலி இடை என்ற எழுத்துக்களின் பின்னும் வரும் என்பது.
                                                                         16

ஆய்தம் குற்றெழுத்தின் பின்னர் வல்லின உயிர்மெய் யெழுத்தின் முன்னர் வரும் என்பது.
                                                                         17

மெய் அகரத்தொடு சேர்வுழிப் புள்ளியை ஒழித்ததன் வடிவே வடிவாகியும், ஏனைய உயிரொடு சேர்வுழி உருவு சற்றுத் திரிந்தும், ஏறிய உயிரின் மாத்திரையையேகொண்டு, மெய்யின் வடிவை மிகப்பெற்று, முன்னர் மெய்யொலியும் பின்னர் உயிர் ஒலியும் பொருந்த உயிர்மெய் தோன்றும் என்பது.
                                                                         18

ஓசை குறையுமிடத்து மொழி மூன்றிடத்தும் உள்ள நெடில் பின்னர் இனமொத்த குற்றெழுத்து வர அதனோடு சேர்தலான் உயிரளபெடை தோன்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 20:32:44(இந்திய நேரம்)