Primary tabs
பதவியல்
எழுத்துத் தனித்தும் இணைந்தும் தொடர்ந்தும்
பொருள்தரின் பதமாம் என்பதும், அப்பதம்
பகாப்பதம், பகுபதம் என்ற இருவகைப்படும்
என்பதும்.
38
நெட்டெழுத்து ஏழே ஓரெழுத் தொருமொழி என்பதும்,
குற்றெழுத்து ஐந்து மொழியாகா, சில ஆகும்
என்பதும்.
39
பகாப்பதம் பகுக்கப்படுவதன்றாய்ப்
பெயர்ப்பகாப்பதம், வினைப்பகாப்பதம்,
இடைப்பகாப்பதம், உரிப்பகாப்பதம் என்ற நான்கு
வகைப்படும் என்பது.
40
பகுபதம் பகுக்கப்படும் இயல்பிற்றாய் வினை,
வினைப்பெயர் என்ற இருவகைப்படும் என்பது.
41
பகுபதத்தைப் பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி
விகாரம் என்ற ஆறுபகுப்புள் ஏற்பன கொண்டு
பிரித்துக் காண்க என்பது.
42
நடமுதல் அஃகுஈறாக எடுத்துக்காட்டிய முறையை
ஒட்டி இயல்பு உயிரும் ஒற்றும் குற்றியலுகரமும்
ஆகிய இருபத்துமூன்று ஈற்றவாகிய முதல் நிலைத்
தொழிற்பெயர்களைப் பகுதியாகக்கொண்டு இயற்றும்
வினைமுதல் தெரிநிலைவினை நிகழும் என்பது.
43
அவ்விருபத்துமூன்று வகைப் பகுதிகளொடு “வி”
என்பதோ “பி” என்பதோ ஏற்ற பெற்றி வந்து அமையும்
தொழிற்பெயர்களைப் பகுதியாகக் கொண்டு ஏவல்
வினைமுதல் தெரிநிலைவினை நிகழும் என்பது.
44