Primary tabs
LXXIII
பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் ஆகிய
பெயர்களை முதல்நிலையாகக் கொண்டு குறிப்பு
வினைமுற்றுப்பகுபதம் நிகழும் என்பது.
45
அன் முதலாக உம் ஈறாகக்கிடந்த முப்பத்தொன்பதும்,
அவைபோல்வன பிறவும் வினை விகுதி;் அவற்றுள் சில
வினைப்பெயர் விகுதி என்பது.
46
கடதற என்ற ஒற்றுக்களும், இன் என்னும்
குற்றொற்றும் இறந்தகால இடைநிலை என்பது.
47
ஆ நின்று, கின்று, கிறு என்பன நிகழ்கால இடைநிலை
என்பது.
48
பகர ஒற்றும் வகர ஒற்றும் எதிர்கால இடைநிலை
என்பதும், காலங்காட்டும் இடைநிலைகளைச் சில
வினைமுற்றுப் பகுபதங்கள் ஏலா என்பதும்.
49
குடுதுறு கும் டும் தும் றும் ப மார் மின் என்ற
விகுதிகளும் வியங்கோள் விகுதியும் ஏவல் வினை
முற்றுக்களும் எதிர்மறை வினைகளும்,
எதிர்காலமும், செய்யும் என்பது நிகழ்கால
எதிர்காலங்களும் இடைநிலையின்றிக் காட்டும்
என்பது.
50
வினைக்குறிப்பு முற்றின் பகுதிக்கும்,
விகுதிக்கும் இடையில் இருக்கும் உறுப்பு
இடைநிலை என்பது.
51
இவ்விடைநிலைகளைத் தெரிநிலை வினைப்
பெயர்களுக்கும் குறிப்பு வினைப்பெயர்களுக்கும்
கொள்ளுதல் வேண்டும் என்பது.
52