Primary tabs
LXXV
அன் ஆன் இல் அல் அற்று இற்று அத்து அம் தம் நம்
நும் ஏ அ உ ஐ கு ன முதலியன சாரியை
என்பது.
59
நிலைமொழியீற்றில் இயல்பாகவோ விதியாகவோ அகரம்
இருப்பின்; அத்துச்சாரியையின் அகரம்
கெட்டுவிடும் என்பது.
60
சொல்லின்முன் விகுதியோ சொல்லோ உருபோ
புணரும்இடத்து, ஒரு சாரியையோ பல சாரியைகளோ
வருதலோ, வராதிருத்தலோ, விகற்பித்தலோ நிகழும்
என்பது.
61
எழுத்தான் ஒரு வடிவினவாயிருக்கும் புணர்
மொழிகள் ஓசை வேறுபட்டால்தான் பகுத்து
உணரப்படும் என்பது.
62
அவற்றை ஒலிவடிவானன்றி வரிவடிவான் பகுத்து
உணர்தல் இயலாது என்பது.
63
நிலைமொழியீற்று மெய்யொடு வருமொழி முதலில் வரும்
உயிர் ஏறி முடியும் என்பது.
64
நிலைமொழியீற்றுக் குற்றியலுகரத்தொடும் வருமொழி
முதலில் வரும் உயிர் ஏறி முடியும் என்பதும்,
வருமொழி முதலில் யகரம் வரின் நிலை மொழியீற்றுக்
குற்றியலுகரம் கெட அதன் இடத்துக் குற்றியலிகரம்
வரும் என்பதும்.
65
தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ஒற்று நிலை மொழி
ஈற்றிலிருக்க, வருமொழி முதலில் உயிர்வரின்
ஈற்று ஒற்று இரட்டும் என்பது.
66