Primary tabs
LXXVI
நிலைமொழியீற்றில் யகர மெய் நீங்கலான ஏனைய
மெய்களுள் ஒன்று நிற்ப, வருமொழி முதலில்
யகரம்வரின், இடையே ஓர் இகரச் சாரியை தோன்றலும்
உண்டு என்பது.
67
இகர ஈகார ஐகார ஈற்று நிலைமொழிமுன் வருமொழி
உயிர்வரின் யகர மெய்யும், ஏனை ஈற்று
உயிர்களின்முன் வருமொழி உயிர்வரின் வகர
மெய்யும் இடையே உடம்படுமெய்யாகத் தோன்றும்
என்பதும், உடம்படுமெய் வருதல் ஒருதலையன்று
என்பதும்.
68
இருபத்துநான்கு ஈற்றின் முன்னரும் மென்கணமும்
இடைக்கணமும் வரின் இயல்பாகப் புணரும் என்பதும்,
தனிக்குறிலைச் சார்ந்த யகர மெய்யீறு, தனி ஐ,
நொ, து என்ற ஓரெழுத்தொரு மொழிகள் இவற்றின் முன்
இயல்பாதலேயன்றி மெல்லெழுத்து மிகுதலும் உண்டு
என்பதும், ணளலன ஈற்றுமுன் வரும் நகரம் திரியும்
என்பதும்.
69
ணகர ளகர ஈறுகளின் முன்வரும் தகரம் டகரமாம்
என்பதும், நகரம் ணகரமாம் என்பதும், னகர லகர
ஈறுகளின் முன்வரும் தகரம் றகரமாம் என்பதும்,
நகரம் னகரமாம் என்பதும்.
70
பொதுப்பெயர்களும் உயர்திணைப் பெயர்களும்
வருமொழி நாற்கணமும் வரின் இயல்பாகப் புணரும்
என்பதும், உயர்திணைப் பெயர்களுள் சில விகாரப்
புணர்ச்சி பெறும் என்பதும்.
72