Primary tabs
LXXX
இகரஈறு :
அன்றி, இன்றி என்ற வினையெச்சங்கள் செய்யுளில்
உகர ஈறாய்த் திரிந்தவழி மிகாது புணரும்
என்பது.
91
சுவைப்பொருள் தரும் புளி என்ற ஈற்றின்முன்
வல்லெழுத்தேயன்றி மெல்லெழுத்தும் மிகும்
என்பது.
92
ஈகாரஈறு :
பீஎன்ற சொல் இயல்பாய் அல்வழியில் புணரும்
என்பதும், மீ என்ற மரூஉ மொழி வேற்றுமைக் கண்
இயல்பு ஆதலேயன்றி, வல்லெழுத்தும்
மெல்லெழுத்தும் பெற்றுப் புணரும்
என்பதும்.
93
ஆ என்பதன் முன்வரும் பீ என்ற சொல் இடையே
வல்லெழுத்துப்பெற்றுக் குறுகும் என்பது
94
உகரஈறு :
ஒரு இரு முதலிய விதி உகர ஈறாகிய எண்ணுப்
பெயர்களும், அது இது உது என்ற
சுட்டுப்பெயர்களும் இயல்பாகப் புணரும்
என்பதும், அது என்ற நிலைமொழி அன்று என்பது
வருவழி அதா அன்று எனவும், ஐ என்ற சாரியை வருவழி
அதை எனவும் புணரும் என்பதும்.
95
ஊகாரஈறு :
பூ என்ற பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண்
வல்லெழுத்தே யன்றி மெல்லெழுத்தும் மிக்குப்
புணரும் என்பது.
96