Primary tabs
LXXXII
குற்றியலுகர ஈறுகள் சில ஐகார ஈறுகளாகத்
திரியும் என்பது.
104
திசைப் பெயர்களோடு திசைப் பெயர்களும்
பிறபெயர்களும் புணருமிடத்து, வடக்கு குணக்கு
குடக்கு கிழக்கு என்பனவற்றின் ஈற்று
உயிர்மெய்யும் அதனையடுத்த ககர ஒற்றும் கெடும்
என்பதும், தெற்கு என்பதன் றகரம் னகரமாகவும்,
மேற்கு என்பதன் றகரம் லகரமாகவும் திரியும்
என்பதும், பிற மாற்றங்கள் நிகழ்தலும் ஆம்
என்பதும்
105
குற்றியலுகர ஈற்று எண்ணுப் பெயர்கள் பொதுவாகப்
புணரும்போது நிகழும் மாற்றங்கள் இவை
என்பது
106
ஒன்று ஒரு எனவும், இரண்டு இரு எனவும் திரிந்து
வருமொழியோடு புணரும் என்பது.
107
மூன்று என்பதன் இடையொற்றுக் கெடுதலும் வருமொழி
யொற்றாகத் திரிதலும் ஆம் என்பது.
108
நான்கு என்பதன் னகரம் லகரமாகவும் றகரமாகவும்
திரியும் என்பது.
109
ஐந்து என்பதன் நகரம் வருமொழி யெழுத்தாகவும்
அதன் இனஎழுத்தாகவும் திரிதலும், கெடுதலும்
பொருந்தும் என்பது.
110
எட்டு என்பதன் டகரம் ணகரமாகும் என்பது.
111
ஒன்பது பத்து - தொண்ணூறு எனவும்,
ஒன்பதுxநூறு-தொள்ளாயிரம் எனவும் புணரும்
என்பது.
112