தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


LXXXVII

தனிக்குறிலைச் சார்ந்துவரும் லகரமும், ளகரமும் வருமொழி முதற்கண் தகரம்வரின் அல்வழிப் புணர்ச்சிக்கண் ஆய்தமாகவும் பெறும் என்பது.
                                                                        138

தனிக்குற்றெழுத்து ஒன்றனையும் சாராத லகர ளகரங்கள், அல்வழிப்புணர்ச்சியில் வருமொழி முதலில் வந்த தகரம் திரிந்த இடத்துக்கெடும் என்பதும், அல்வழி வேற்றுமை ஆகிய இருவழியும் வருமொழி முதற்கண் வரும் நகரம் திரிந்தவழிக் கெடும் என்பதும், தகரம் நீங்கலான ஏனைய வல்லெழுத்துக்கள் வருமொழி முதற்கண்வரின் இயல்பாகவும் திரிந்தும் புணரும் என்பதும்.
                                                                        139

நெல் செல் கொல் சொல் என்பன அவ்வழிப் புணர்ச்சிக்கண்ணும் றகரமாகத் திரியும் என்பது.
                                                                        140

வல் என்ற சொல் இருவழியும் உகரச்சாரியை பெறும் என்பதும், பலகை நாய் என்பன வருமொழியாகவரின் உகரமேயன்றி அகரச்சாரியையும் பெறும் என்பதும்.
                                                                        141

இல் என்ற சொல், வருமொழி முதற்கண் வல்லெழுத்து வரின் ஐகாரச்சாரியை பெறுதலும், அதனோடு வல்லெழுத்துப் பெறுதலும், ஆகாரச் சாரியையொடு வல்லெழுத்துப் பெறுதலும், விகாரமின்றி இயல்பாகப் புணர்ந்து முடிதலும் ஆம் என்பது.
                                                                        142

புள் வள் என்ற சொற்கள் இயல்பாகவும், தொழிற் பெயர்போல உகரச்சாரியை பெற்றும் புணரும் என்பது.
                                                                        143

வகர ஈறு :

அவ் இவ் உவ் என்ற சுட்டுப்பெயர்களின் ஈற்று வகரம் வருமொழி முதலில் வன்கணம் வர ஆய்த


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 20:36:08(இந்திய நேரம்)