Primary tabs
LXXXVIII
மாகவும், மென்கணம்வர வந்த மெல்லெழுத்தாகவும்
திரிந்தும், இடைக்கணம்வர இயல்பாகவும் புணரும்
என்பது.
144
தெவ் என்ற சொல் தொழிற் பெயர்போல உகரம் பெற்றுப்
புணரும் என்பதும், வருமொழி முதற்கண் மகரம்
வரின் நிலைமொழியீற்று வகரமும் மகரமாகத்திரியும்
என்பதும்.
145
உருபு புணர்ச்சிக்கண் கொள்ளப்படும் புணர்ச்சி
முடிபு உயிரீறு ஒற்றீறு ஆகிய ஈரீற்றுப் பொருட்
புணர்ச்சிக்கண்ணும் கொள்ளப்படும் என்பது.
146
இடைச்சொற்கள் உரிச்சொற்கள் வட சொற்கள்
போலிச்சொற்கள் மரூஉச்சொற்கள் இவை முற்கூறப்பட்ட
விதிகொள்ளாவிடத்து, இது வகை வழக்கு முறைகளையும்
கடைப்பிடித்து அவற்றிற்கு ஏற்பப்
புணர்க்கப்படும் என்பது.
147