Primary tabs
உருபு புணரியல்
உருபுகள், உயிரீற்றுப் புணரியல் மெய்யீற்றுப்
புணரியல் ஆகியவற்றில் கூறப்பட்ட பொருட்
புணர்ச்சி விதிகளையும் ஏற்ற பெற்றி கொள்ளும்
என்பது.
148
எல்லா ஈற்றுப் பெயர்களும் இன்சாரியை பெறும்
என்பது.
149
அகரஈற்றுப் பன்மைப்பெயர் அற்றுச்சாரியை பெறும்
என்பது.
150
ஆ மா கோ என்ற சொற்கள் னகர ஒற்று ஆகிய
சாரியையும் பெறும் என்பது.
151
எல்லாம் என்ற பொதுப்பெயர், அஃறிணையைக்
குறிக்குமிடத்து இடையே அற்றும் உருபின்பின்
உம்மும் பெறும் என்பதும், உயர்திணையைக்
குறிக்குமிடத்து இடையே நம்முச் சாரியையும்
ஈற்றில் உம்மும் பெறும் என்பதும்.
152
எல்லாரும் எல்லீரும் என்ற சொற்கள், முதலில்
உம்மையை நீக்கி, இடையே முறையே தம்முச்
சாரியையும் நும்முச்சாரியையும் பெற்று, உருபின்
பின் உம்முச்சாரியை மீண்டும் பெறும்
என்பது.
153
உருபு ஏற்கும்போது தான் தாம் நாம் யான் யாம் நீ
நீர் என்பன முறையே தன் தம் நம் என் எம் நின்
நும் என்றாகும் என்பதும், நான்கன் உருபு
ஏற்கும்வழி இத்திரிந்த நிலைமொழிஈற்றில் அகரச்
சாரியை வரும் என்பதும், நான்கன் உருபும் ஆறன்
உருபும் ஏற்கும்போது தனிக்குறில்முன் ஒற்றாய்
அமைந்த இச்சொற்கள் ஒற்று இரட்டா
என்பதும்.
154